Youtube சேனல்களில் மிகவும் குறிப்பிடத்தக்க மற்றும் முன்னணியில் இருக்கும் Blacksheep நிறுவனம், நவம்பர் 6, 2022 இல் நிறுவனத் தூதராக "வைகைப் புயல் " வடிவேலுவை இணைத்து, அதிகாரப்பூர்வமான தொலைக்காட்சி ஒளியலையை தொடங்க உள்ளது. தெளிவான செயல்திறனும் முழுமையான அற்பணிப்புமே பொழுதுபோக்குத்துறை நிறுவனங்களின் வெற்றி மந்திரமாகத் திகழ்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பரந்த மனம் படைத்த பார்வையாளர்களினாலும், ரசனை நிறைந்த பொழுதுபோக்கு தொகுப்புகளினாலும் பல வருடங்களாக வளர்ந்துவந்த Youtube Blacksheep, தற்போது தங்களது சொந்த தொலைக்காட்சி ஒளியலையான 'BLACKSHEEP TV' உடன் நவம்பர் 6,2022இல் இருந்து தொடர்ந்து ஒளிபரப்பாக உள்ளது. Fiction மற்றும் Non fiction என பல பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளின் கூட்டாக இந்த தொலைக்காட்சியானது பலதரப்பட்ட இளம் சமூகத்தினருக்கும் குடும்பத்தினருக்கும் பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | ரூ.1000 கோடி சம்பளமா? சும்மா கிளப்பிவிடாதீங்கய்யா - சல்மான் கான்


இந்நிறுவனத்தின் நிறுவனர் விக்னேஷ்காந்த், BLACLSHEEP தொலைக்காட்சி குறித்து கூறுவதாவது, "தொலைக்காட்சி உலகில் எங்கள் புதுவரவை உலகிற்கு அறிவிப்பதில் மகிழ்ச்சி. எங்கள் youtube நிகழ்ச்சிகளுக்கு கிடைத்த வரவேற்புகளுக்காக நாங்கள் பெற்ற மகிழ்ச்சி சொல்லிலடங்காதது. இறுதியாக, எங்களின் வளர்ச்சிக்கு காரணம், இளைஞர்களின் பெரும் பங்களிப்பு என்பதை அறிந்தோம். அவர்களின் தீவிரமான ஆதரவும் பாராட்டுமே எங்களைப் பல்வேறு உள்ளடக்கங்களையும் படைப்புகளையும் உருவாக்கத் தூண்டியது. இதுவே தொலைக்காட்சியை தொடங்கும் சிந்தனைக்கு வழிவகுத்தது. அது பயனுள்ள பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை படைக்கவும், அவை இளம் தலைமுறையினருக்கு மட்டும் பயன்படும் வழியில் அல்லாமல், அவர்களுது குடும்பத்தினர் அனைவருக்கும் பயனுள்ளதாகவும் அமையும் வண்ணம் தயாரிக்கப்பட்டுள்ளது. பல்வேறு புனைவு மற்றும் அபுனைவு அல்லாத நிகழ்ச்சிகள், வெவ்வேறு பிரிவுகள் மற்றும் கருத்துகளை சார்ந்த படைப்புகளையும் உருவாக்க உள்ளோம். அதுமட்டுமின்றி, சிறந்த சாதனையாளர்கள், வெற்றித் தொழில்முனைவர்கள் மற்றும் வெவ்வேறு தளங்களின் குறிப்பிடத்தக்க ஆளுமைகள் ஆகியோரை இளைஞர்களை ஈர்க்கும் வகையிலும் பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நிகழ்ச்சிகள் வழங்க உள்ளோம் ".



நிறுவனத்தூதரான வைகை புயல் வடிவேலு குறித்து விக்னேஷ்காந்த் பகிர்ந்ததாவது, " வைகைப்புயல் வடிவேலு என்பவர் ஒரு பல்திறன் வாய்ந்த மனிதர். நமது எலும்புகளையும் தன் கலைத்திறனாலும் நகைச்சுவையாலும் சிரித்துணர செய்து, மீம்ஸ் படைப்பாளர்களின் அமிர்தமாக மிளிர்ந்து, பொழுதுபோக்கு உலகையே ஆள்பவறாக திகழ்கிறார். அவரது பல்வகை நகைச்சுவை திறன்களால் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்திக்கொண்டே உள்ளார். நாமும் நமது BLACKSHEEP தொலைக்காட்சியை அதே வடிவமைப்பில் வளர்த்து வருவதனால், அவர் மட்டுமே நமது தொலைகாட்சியின் மிகப் பொருத்தமான சின்னமாக இருக்க முடியும் என உணர்ந்தோம்." என்றார்.


ஆதிகாரப்பூர்வமாக நவம்பர் 2022இல் இருந்து blacksheep தொலைக்காட்சி இயங்கும், நேயர்களுக்கு முழுமையான பொழுதுபோக்கு தொகுப்புகளை வழங்கும். திரை நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்பக்கலைஞர்கள் உடனான உரையாடல் மற்றும் நிகழ்ச்சிகளின் மூலம், இத்தொலைகாட்சியானது, இளம் தலைமுறை மற்றும் குடும்பத்தினருக்கான ஒருமித்த இலக்காக இருக்கும் என்பதில் ஐயமில்லை.


மேலும் படிக்க | பிக்பாஸ் வீட்டில் முதல் எலிமினேஷன் இவர்களில் யார்? லிஸ்ட் இதோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ