பாலிவுட் தயாரிப்பாளரான வினோத் பானுஷாலி, ஹிட்ஸ் மியூசிக் என்ற புதிய நிறுவனத்தை தொடங்கியிருக்கிறார். இந்த நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் இருக்கும் பிரபல இசையமைப்பாளர்கள் உள்ளிட்டோர் பணியாற்ற உள்ளனர். தமிழில் யுவன் சங்கர் ராஜாவுன் ஹிட்ஸ் மியூசிக் நிறுவனம் கைகோர்த்துள்ளது. யுவன் சங்கர் ராஜா மற்றும் ஹிட்ஸ் மியூசிக் நிறுவனத்தின் சார்பில் உருவாகியுள்ள கேன்டி ஆல்பம் அதிகாரப்பூர்வமாக நாளை வெளியாக உள்ள நிலையில், இப்போது டீசர் வெளியிடப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | சிம்பு பட தயாரிப்பாளர் வீட்டில் வருமான வரி சோதனை


கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிப்பதில் அவ்வளவாக ஆர்வமில்லை எனக் கூறியிருந்த யுவன் சங்கர் ராஜா, கேன்டி ஆல்பத்தில் மாஸ் ஹீரோவுக்கு இணையாக நடித்துள்ளார், தெருக்குரல் அறிவு, தாவணி பானுஷாலி ஆகியோர் இந்த ஆல்பத்தில் பணியாற்றியுள்ளனர். அமித் என்பவர் கேன்டி ஆல்பத்தை இயக்கியுள்ளார். 30 நொடிகளில் வெளியாகியிருக்கும் டீசர், யுவன் யூ டியூப் சேனலில் வெளியிடப்பட்ட முதல் ஒரு மணி நேரத்திலேயே ஒரு லட்சம் பார்வைகளைக் கடந்துள்ளது. முழு ஆல்பத்தையும் காண தயாராக இருப்பதாக யுவன் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். 



ஹட்ஸ் மியூசிக் நிறுவனம் குறித்து பேசியுள்ள வினோத் பானுஷாலி, தன்னுடைய புதிய நிறுவனம் இசை உலகில் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வரப்போவதாக தெரிவித்துள்ளார். இதற்காக இந்திய அளவில் பிரபலமாக இருக்கும் அஜய்-அதுல், அனு மாலிக், டீப் மனி, கவுரவ் தாஸ்குப்தா, ஜெய்தேவ், கரான், சோனு நிகம், ஜாவேத் அலி, ரப்தார் மற்றும் பி பிராக் போன்ற பாப்புலரான பாடகர்கள் மற்றும் இசையமைப்பாளர்கள் தங்கள் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்ற உள்ளதாக தெரிவித்துள்ளார். இசையில் ஆர்வம் உள்ள இன்டிபென்டன்ட் இசையமைப்பாளர்கள் மற்றும் பாடகர்களுக்கு, தங்கள் நிறுவனம் வாய்ப்பளிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.


மேலும் படிக்க | ’விக்ரம் சக்சஸ்’ சேட்டிலைட், டிஜிட்டல் ரைட்ஸ் இத்தனை கோடிக்கு விற்பனையா?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR