Anna Serial Update : தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் செல்வம் பரணியை கடத்திய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதாவது சண்முகமும் மற்றவர்களும் பரணியை தேடி அலைகின்றனர். ஆனால் இது எதையும் பெருசாக கண்டு கொள்ளாத சௌந்தரபாண்டி பாக்கியம் சாப்பாடு போட சொல்ல அவள் பொண்ணை காணோம்னு தேடிட்டு இருக்கோம், உங்களுக்கு சாப்பாடு கேக்குதா என்று திட்டுகிறாள். 


மேலும் படிக்க | கமலை காணோம்..கல்கி 2898 ஏடி பட டிரைலருக்கு ரசிகர்கள் கொடுத்த ரியாக்ஷன்!


உடனே சௌந்தரபாண்டி மனதுக்குள் பொண்ணு எங்க இருக்கானு எனக்கு தானே தெரியும் என்று சொல்லி சிரித்து கொள்ள இதை இசக்கி நோட் பண்ணி விடுகிறாள், பிறகு ஷண்முகத்திற்கு போன் செய்து அண்ணா எனக்கு என்னமோ சௌந்தரபாண்டி மாமா மேல சந்தேகமாக இருக்கு, பொண்ணை காணோம்னு அவருக்குள்ள கொஞ்சம் கூட கவலை இல்லை என்று சொல்கிறாள். 


இதையடுத்து ஷண்முகம் ஐடியா ஒன்றை சொல்ல இசக்கி பரணியோட பிணம் ஆத்துல மிதக்குதாமே என்று அழுது புலம்ப சௌந்தரபாண்டி அதிர்ச்சி அடைகிறார். முத்துபாண்டியை தனியாக அழைத்து சென்று ஏ.கே.எஸ் அண்ணாச்சிக்கு போனை போட சொல்கிறார். பிறகு அவரிடம் பரணி குறித்து விசாரித்து அவள் பாதுகாப்பாக இருப்பதை தெரிந்து கொள்ள சிவபாலன் மறைந்திருந்து இதை பார்த்து விடுகிறான். 


இசக்கியிடம் சிவபாலன் உண்மையை சொல்ல அவள் ஷண்முகத்திற்கு தகவல் கொடுக்கிறாள். மறுபக்கம் செல்வம் பரணிக்கு மயக்க மருந்து கலந்த ஜூஸை கொடுக்க அவள் குடிக்க மறுத்து ஷண்முகம் என்று கத்த ஷண்முகம் என்ட்ரி கொடுத்து ஏ.கே.எஸ் அண்ணாச்சி மற்றும் செல்வத்தை அடித்து துவைத்து பரணியை காப்பாற்றுகிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


மேலும் படிக்க | நடிகைகளை ஓரம் கட்டும் அளவிற்கு ஜொலிக்கும் பிரியா அட்லி: போட்டோஸ் இதோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ