தமிழ் சின்னத்திரையில் பிரபலமான தொலைக்காட்சி சேனல்களில் ஒன்று ஜீ தமிழ், மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றுள்ள இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு தொடர்ந்து தனித்துவமான வரவேற்பு கிடைத்து வருகிறது. சீரியல்கள் மட்டுமின்றி சரிகமப, டான்ஸ் ஜோடி டான்ஸ் போன்ற ரியாலிட்டி ஷோக்களும் பெரிய அளவில் மக்களை கவர்ந்து வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்கள் மூலமாக மக்களை மகிழ்வித்து வரும் கலைஞர்களை தொலைக்காட்சி நிறுவனம் ஊக்கப்படுத்த மறைப்பதில்லை, 2024 தொடங்கியதும் ஜீ தமிழ் விருதுகள் என்ற நிகழ்ச்சியை நடத்திய நிலையில் தற்போது ஜீ தமிழ் நிகழ்ச்சிகளின் சிறப்பான தருணங்களை கொண்டாடும் வகையில் ஜீ தமிழ் கோல்டன் அவார்ட்ஸ் என்ற பெயரில் விருது விழா நடந்து முடிந்தது. 


மேலும் படிக்க | மகாமுனி பட இயக்குனரின் அடுத்த படத்தில் நடிக்கும் அர்ஜுன் தாஸ்! வெளியானது ட்ரைலர்!


மிக பிரம்மாண்டமாக செட்டில் பல திரையுலக பிரபலங்கள் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் நம்பர் 1 சீரியல், பெஸ்ட் அம்மா பாசம், போல்ட் நடிகை, இதயம் தொட்ட தொடர், பெஸ்ட் ரொமான்ஸ், பெஸ்ட் ஜோடி, பெஸ்ட் மாமியார் - மருமகள், பெஸ்ட் எமோஷன், பெஸ்ட் ஆக்ஷன், பெஸ்ட் மாஸ் பில்டப், பெஸ்ட் காமெடி, குடும்பங்களை கவர்ந்த சீரியல் என பல தலைப்புகளில் விருது வழங்கப்பட்டுள்ளது. 


இயக்குனர் ஹரி, மிஸ்கின், சுந்தர் சி, சீமான், தமிழிசை சௌந்தராஜன், மிர்னாலினி, மீனாட்சி, சங்கீதா, விடிவி கணேஷ், ரித்விகா, ஜி.வி பிரகாஷ், அருண் ராஜா காமராஜா, கதிர் என பல நடிகர், நடிகைகள் இந்த கோல்டன் மூமென்ட்ஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர். 


இந்த விருது விழா நிகழ்ச்சி இரண்டு பாகங்களாக ஒளிபரப்பாக உள்ளதாகவும் முதல் பாகம் மே 1-ம் தேதி மதியம் 1 மணிக்கு ஒளிபரப்பாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டு அதற்கான ப்ரோமோ வீடியோக்களும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


யாரெல்லாம் விருது வாங்கினார்கள்? உங்க பேவரைட் நட்சத்திரங்கள் என்ன பேசினார்கள்? என்பதை எல்லாம் அறிந்து கொள்ள கோல்டன் மூமென்ட்ஸ் 2024 நிகழ்ச்சியை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


மேலும் படிக்க | Anchor DD: மரண படுக்கையில் அப்பாவுக்கு செய்து கொடுத்த சத்தியம்! உருக்கமாக பேசிய டிடி..


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ