அபிராமி கைக்கு வரும் தீபாவின் தாலி.. பரபரப்பான ட்விட்ஸ்டுகளுடன் கார்த்திகை தீபம் சீரியல்!
Karthigai Deepam Serial: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் கார்த்திகை தீபம் தொடரில், இன்றைய எபிசோடில் நடக்கப்போவது என்ன என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
Karthigai Deepam Serial: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8.45 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான தொடர், கார்த்திகை தீபம் சீரியல். இந்த தொடரின் நேற்றைய (மே 9) எபிசோடில் அபிராமி மண்டபத்தில் கார்த்தியை தவிர எல்லாரையும் வர சொல்லிய நிலையில், இன்றைய எபிசோடில் நடக்க போவது என்ன என்பது குறித்து இதில் காணலாம்.
புறப்படும் அபிராமி
எல்லோரையும் வர வைத்த அபிராமி சித்தர் சொன்ன விசயங்களை சொல்லி,'நான் இங்க இருந்தா, இந்த கல்யாணம் நல்லபடியா நடக்காது, நான் கிளம்பறேன்' என சொல்ல எல்லாரும் அபிராமியை சமாதானம் செய்ய முயற்சி செய்தனர். ஆனால், அபிராமி கிளம்புவதில் உறுதியாக உள்ளார். பிறகு, 'கார்த்தியிடம் எதையும் சொல்ல வேண்டாம், அப்படியே அவன் கேட்டால் சின்ன பரிகார பூஜை இருக்கு, அதுக்காக போய் இருக்கேனு சொல்லுங்க' என சொல்லி கார்த்தியின் ரூமை கொஞ்சமாக திறந்து அவனுக்கு தெரியாமல் அவனை பார்த்து விட்டு அங்கிருந்து கிளம்பி செல்கிறார்.
தர்மசங்கடத்தில் தீபா
மறுபக்கம் தர்மலிங்கம் வீட்டில் எல்லாரும் தீபாவின் கல்யாணத்துக்கு தயாராகி கொண்டிருக்க தர்மலிங்கம் நண்பர் சண்முகம் என்பவர் வீட்டுக்கு வந்தார். அவரை வரவேற்று உங்க மனைவி வரலையா என கேட்க அவர், 'என்னுடைய பொண்ணுக்கு கல்யாணம் பேசி இருந்தோம், மணமேடை வரை வந்த அவ யாரையோ காதலிப்பதாக சொல்லி ஓடி போய்ட்டா, அந்த அதிர்ச்சியில் என்னுடைய மனைவி இறந்துட்டா' என சொல்லி வருந்தினார். அதற்கு தர்மலிங்கம்,'என் பொண்ணு தீபா எங்க பேச்சை மீறி எதையும் செய்ய மாட்டா, நாங்க பார்த்து வச்ச மாப்பிளையை தான் கல்யாணம் பண்ணிக்க போறா' என பெருமையாக சொல்ல, இதனை ஜானகி மற்றும் தீபா கேட்டு வருத்தப்படுகின்றனர்.
மேலும் படிக்க | முதல் இரவில் உடைந்து விழுந்த கட்டில் - மாரி சீரியல் இன்றைய எபிசோட்!
தாலி கழட்ட மறுக்கும் தீபா
அதன் பிறகு தீபாவை கூட்டி கொண்டு வீட்டில் உள்ளவர்களை சமாளித்து கோவிலுக்கு வரும் ஜானகி 'இன்னைக்கு உனக்கு கல்யாணம், இந்த சமயத்துல இந்த தாலி உன் கழுத்துல இருக்கிறது நல்லது இல்ல, கழட்டு' என்றார். அதற்கு தீபா,'இது கடவுள் கொடுத்த தாலி, கழட்ட மாட்டேன்' என அடம் பிடிக்கிறாள். ஜானகி,'இந்த தாலியால் ஒரு புரோஜனமும் இல்ல, கார்த்திக்கும் உன்ன ஏத்துக்க வாய்ப்பு இல்ல' என சொல்ல தீபா,'என்னுடைய மனசு முழுக்க கார்த்திக் சார் தான் இருக்காரு, இந்த தாலியை கழட்டினா அவருக்கு ஏதாவது ஆபத்து வரும்' என மறுக்க ஜானகி தீபாவுக்கு புரிய வைக்க முயற்சி செய்கிறாள்.
மனம் மாறிய தீபா
இந்த சமயம் பார்த்து அபிராமி இதே கோவிலுக்கு வருகிறார். வெளியில் பூக்கூடை வாங்கி கொண்டிருக்க ஜானகி தீபாவை தாலியை கழட்ட சொல்ல தீபா மறுப்பு தெரிவித்து கொண்டே இருக்கிறாள். மறுப்பக்கம் கோவிலுக்கு போனவங்க இன்னும் வரல நேரமாச்சு என தர்மலிங்கமும் மைதிலியும் கோவிலுக்கு கிளம்பி வருகின்றனர்.
இங்கே ஜானகி ஒருவழியாக தீபாவை சமாதானம் செய்ய தீபா,'என் அப்பா அம்மாவுக்காக தான் தாலியை கழட்டுறேன்' என கடவுளை வேண்டி கொண்டு தாலியை கழட்டுகிறாள். தாலியை கழட்டி தட்டில் வைத்ததும் தர்மலிங்கம் அங்கு வந்து இருவரையும் அழைத்து கொண்டு கிளம்புகிறார்.
அம்மனின் திருவிளையாடல்
பிறகு அபிராமி கோவிலுக்கு வர பூசாரி, 'பூஜை பிரசாதம் இருக்கு அதை உங்களுக்கு தருகிறேன்' என சொல்லி கூட்டி போக அபிராமி தனது மகனுக்கு கல்யாணம் நல்லபடியாக நடக்க வேண்டும் என வேண்டிக்கொண்டிருந்தார். அப்போது பூசாரி பூ எடுத்து தரும் போது அவருக்கே தெரியாமல் தீபா கழட்டி வைத்த தாலியையும் எடுத்து கொடுக்கிறார்.
இதையெல்லாம் அங்கிருந்து பார்த்த சித்தர் 'நடத்து, நடத்து.. எல்லாம் உன் விளையாட்டு தான்' என அம்மனை பார்த்து சொல்கிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மறக்காமல் பாருங்க.
மேலும் படிக்க | அமுதாவும் அன்னலட்சுமியும்: அமுதாவை அவமானப்படுத்திய பழனி, தேர்தலில் நடக்க போவது என்ன?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ