அமுதாவும் அன்னலட்சுமியும்: அமுதாவை அவமானப்படுத்திய பழனி, தேர்தலில் நடக்க போவது என்ன?

Amudhavum Annalakshmiyum Today's May 10 Episode Update: அமுதா கொடுத்த பதிலடி.. செந்திலுக்கு ஷாக் கொடுத்த அன்னம் - அமுதாவும் அன்னலட்சுமியும் இன்றைய எபிசோட் அப்டேட்

Written by - Vijaya Lakshmi | Last Updated : May 10, 2023, 10:07 AM IST
  • அமுதாவும் அன்னலட்சுமியும்: சீரியலை எங்கு பார்ப்பது?
  • அமுதவும் அன்னலட்சுமியும் சீரியல் 2022 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது.
  • இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது.
அமுதாவும் அன்னலட்சுமியும்: அமுதாவை அவமானப்படுத்திய பழனி, தேர்தலில் நடக்க போவது என்ன? title=

தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘அமுதாவும் அன்னலட்சுமியும்' சீரியல்.

அமுதாவும் அன்னலட்சுமியும்: இன்றைய எபிசோட்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும். நேற்றைய எபிசோடில் உமாவும் பழனியும் திட்டம் போட்டு கோவிலுக்கு வந்த செல்வா மற்றும் புவனாவை கடத்தினர். இப்படியான நிலையில் இன்றைய எபிசோடில் நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

மேலும் படிக்க | முதல் இரவில் உடைந்து விழுந்த கட்டில் - மாரி சீரியல் இன்றைய எபிசோட்!

அனைவரும் பள்ளிக்கு ஓவ்வொருவராக வந்து கொண்டிருக்க அமுதா மற்றும் உமா என இருவரும் ஓட்டு சேகரித்து கொண்டு இந்த தேர்தலில் ஜெயிக்க போவது யார் என்பதை பார்க்கலாம் என ஒருவருக்கொருவர் சவால் விடுகின்றனர். 

இதனை தொடர்ந்து தேர்தல் விதிமுறைகள் என்ன என்பது அறிவிக்கப்படுகிறது. பழனி அனைவர் முன்பும் நின்று பள்ளிக் கூடத்தை உலகதரத்துக்கு கொண்டு வருவேன்.. பிள்ளைகள் படிக்கிறதுக்கு பெத்தவங்க செலவு பண்ணித்தான் ஆகனும் என சொல்கிறான். 

அதன் பிறகு அமுதா பதவிக்கு வந்தா இப்ப இருக்குற நிலைமையை விட பள்ளிக் கூடம் கீழ தான் போகும் என பழனி சொல்ல, அமுதா, அன்னம் அவனை முறைத்து பார்க்கின்றனர். மேலும் படிப்பறிவில்லாத அமுதா பதவிக்கு வந்தா பிள்ளைகளோட எதிர்காலம் என்ன ஆகும் என பழனி சொல்கிறான்.

இப்படியான நிலையில் பழனியின் பேச்சுக்கு அமுதா எப்படி பதிலடி கொடுக்க போகிறாள், அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

அமுதாவும் அன்னலட்சுமியும்: சீரியலை எங்கு பார்ப்பது?
அமுதவும் அன்னலட்சுமியும் சீரியல் 2022 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது. 

மேலும் படிக்க | Beast Mode:திரையை தீ பிடிக்க வைத்த பீஸ்ட் மோட் பாடல் வீடியோ..சில நொடிகளிலேயே பல ஆயிரம் லைக்ஸ்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News