முதல் இரவில் உடைந்து விழுந்த கட்டில் - மாரி சீரியல் இன்றைய எபிசோட்!

Maari Today's Episode Update: மாரி வெளியே வந்து பெரியம்மாவிடம் எண்ணெய் கேட்க ஹாசினி மற்றும் மீனா ஒன்று சேர்ந்து மாரியை கலாய்க்கின்றனர். இப்படியாக இன்றைய எபிசோட் நகர்கிறது.  

Written by - RK Spark | Last Updated : May 10, 2023, 09:38 AM IST
  • மாரி சீரியல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.
  • திங்கள் முதல் வெள்ளி வரை ஒளிபரப்பாகிறது.
  • தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
முதல் இரவில் உடைந்து விழுந்த கட்டில் - மாரி சீரியல் இன்றைய எபிசோட்! title=

Maari Today's Episode Update: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மாரி.   இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் முதலிரவு அறைக்குள் சூர்யா மற்றும் மாரி சென்ற நிலையில் மறுநாள் மாரி வெட்கத்துடன் வெளியே வருகிறாள். கடைசியில் இது ஹாசினி கண்ட பகல் கனவு என தெரிகிறது. பிறகு மீனா இதெல்லாம் நிஜத்தில் நடக்கணும்னா திட்டமிட்டபடி எல்லாம் நடக்க வேண்டும் என சொல்கிறாள். அதன் பிறகு ஹாசினி முதலிரவுக்காக கட்டிலை தயார் செய்ய இதை நடக்க விடக்கூடாது என ஸ்ரீஜா கட்டிலில் இருந்து இரண்டு போல்ட்டுகளை கழட்டி விடுகிறாள். அதன் பிறகு மாரியை மீனா தயார் செய்து ரூமுக்குள் அனுப்பி வைக்க சூர்யா சரி விடு வெளியில் இருக்கவங்களுக்கு ரூமுக்குள்ள என்ன நடக்குதுன்னு தெரியவா போகுது என சொல்லி கட்டில் மீது உட்கார கட்டில் உடைந்து கீழே விழுகிறது. இதனால் சூர்யாவுக்கு சுளுக்கு பிடித்துக் கொள்கிறது. 

மேலும் படிக்க | மதிய வேளையில் மாஸ் காட்ட வந்த சீரியல், ஆரம்பமே களைகட்டிய சண்டக்கோழி - முதல் எபிசோடில் நடந்தது என்ன?

இதன் காரணமாக மாரி வெளியே வந்து பெரியம்மாவிடம் எண்ணெய் கேட்க ஹாசினி மற்றும் மீனா ஒன்று சேர்ந்து மாரியை கலாய்க்கின்றனர். அதன் பிறகு ரூமுக்குள் வரும் மாரி சூர்யாவுக்கு எண்ணெய் தேய்த்து விட அவன் நான் கீழேவே படுத்துக் கொள்கிறேன் என படுத்து தூங்க மாரி உட்கார்ந்து படியே தூங்குகிறாள்.  ‌மறுபக்கம் ஜாஸ்மின், சங்கரபாண்டி மற்றும் சகுந்தலா என மூவரும் சேர்ந்து பாறைக்கு வெடி வைக்கும் ஒருவனை வரவைத்து சாமி சிலைக்குள் பாம் வைக்க ஏற்பாடு செய்கின்றனர். மாரி சாமி சிலையை தூக்கி கொண்டு செல்லும் போது பாம் வெடித்து சிதற வேண்டும். இதனால் ஊர் மக்கள் எல்லோரும் மீண்டும் மாரியை அபசகுணம் பிடித்தவள் என சொல்ல வேண்டும் என்று திட்டம் போடுகின்றனர். 

maari

அடுத்து முத்துப்பேச்சி வீட்டில் தூங்கிக் கொண்டிருக்க திடீரென அவருக்கு சலங்கை சத்தம் கேட்கிறது. என்ன கோவிலில் கேட்ட சத்தம் திரும்பவும் கேட்கிறது என அவர் கோவிலை நோக்கி எழுந்து ஓடி வர இதை பார்த்து சண்முகமும் பின்னாடியே எழுந்து வருகிறார். பிறகு அவரிடம் என் காதில் சலங்கை சத்தம் கேட்டுக்கிட்டே இருக்கு கோவிலை எப்படியாவது திறக்க வேண்டும் என சொல்ல சண்முகம் அதான் தெய்வ சக்தி உள்ள ஒரு பெண் வந்து உங்களுக்கு உதவுவா என குறி சொல்லும் பெண் சொன்னாங்களே கண்டிப்பா கோவிலை திறந்து விடலாம் என சொல்கிறார். மறுநாள் காலையில் மாரி ரூமில் இருந்து வெளியே வர ஹாசினி அவளை கலாய்த்து ரூமுக்குள் சென்று பார்க்க கட்டில் உடைந்து கிடக்கிறது. சூர்யா சாப்டான ஆளுன்னு பார்த்தா இவ்வளவு முரட்டுத்தனமான ஆளா இருக்காரு என ஹாசினி கலாய்க்கிறார். 300 வருஷம் பாரம்பரிய கட்டிலை இப்படி உடைச்சுட்டாரு என சூர்யாவை கலாய்க்கின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப் போவது என்ன என்பது குறித்து அறிய மாரி சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

மேலும் படிக்க | Modern Love Chennai: மாடர்ன் லவ் வெப் தொடரில் இணையும் 6 பெரிய படைப்பாளிகள் யார் யார் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News