அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல் அப்டேட்: தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘அமுதாவும் அன்னலட்சுமியும்' சீரியல்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அமுதாவும் அன்னலட்சுமியும்: இன்றைய எபிசோட்


ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிப்பரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் அமுதா கடத்தப்பட்ட செந்திலை தேடி அலைய தொடங்கிய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.


மேலும் படிக்க | 27 ஆண்டுகளாக வாடகை வீடு..! சொந்த வீட்டுக்கு செல்லும் முன் உயிரிழந்த சோகம்


அதாவது, அமுதா ரோட்டில் செந்திலை தேடி ஓடி வந்து கொண்டிருக்க ரோட்டில் குங்குமம் சிந்திக் கிடக்க அமுதா யோசிக்கிறாள். அவளுக்கு செந்திலிடம் குங்குமமும் பூவும் குடுத்தது நினைவுக்கு வர குங்குமம் விழுந்த திசையை நோக்கி ஓடுகிறாள். ஹாஸ்பிட்டலில் டாக்டர் செந்திலின் வருகைக்காககாத்துக் கொண்டிருக்கிறார். 


செந்தில் குடோனில் இருந்து மெல்ல மெல்ல நகர்ந்துசெல்ல ரவுடிகள் அவனை தேட மாயா தனது தோழியிடம் செந்திலுக்கு கண் திரும்ப கிடைக்கனும்.. எனக்கும் அவனுக்கும் ஒரு உறவு இருக்கு என்று சொல்கிறாள். இங்கே ரவுடிகள் செந்திலை கண்டு பிடித்து வழிமறித்து செந்திலை கிண்டல் செய்கின்றனர்.  அதை வீடியோ காலில் குமரேசனுக்கு காட்ட, குமரேசனும் உமாவும் சந்தோஷப்படுகின்றனர். 


செந்தில் தடுமாறி கீழே விழப் போக அமுதா அவனை தாங்கி பிடித்து ரவுடிகளை அடித்து வெளுத்து செந்திலை அங்கிருந்து ஆஸ்பிட்டலுக்கு அழைத்து செல்ல ஒருவன் செந்திலின் தலையில் அடித்து விடுகிறான். செந்தில் மயங்கி கீழே விழ அமுதா அவனை இழுத்தபடி ரோட்டருகே கொண்டு வர டாக்டர் போன் செய்து சீக்கிரம் வாங்க, ஆபரேஷன் பண்ற டாக்டருக்கு ப்ளைட்டுக்கு டைம் ஆச்சு என்று சொல்கின்றனர். 


அமுதா செந்திலை ஒரு தள்ளுவண்டியில் ஏத்தி அவனை ஆஸ்பிட்டலுக்கு கொண்டு செல்ல டாக்டர் தனக்கு டைம் ஆகி விட்டதால் கிளம்புவதாக சொல்ல மாயா டாக்டரிடம் கெஞ்சுகிறாள். அமுதா தள்ளு வண்டியை ஒரு டாக்சி மேல் இடிக்க உள்ளே டாக்டர் இருக்கிறார். டிரைவர் அமுதாவை பின்னால் போக செல்கிறார். 


ரவுடிகள் உமாவுக்கு போன் செய்து அமுதா வந்து செந்திலை அழைத்து சென்றுவிட்டதாக சொல்ல, உமா கோபத்துடன் கொந்தளிக்க இங்கே அமுதா செந்திலை ஹாஸ்பிட்டலுக்கு கொண்டு வர டாக்டர் அவளிடம் அந்த டாக்டர் பிளைட்டுக்கு நேரமாச்சுனு கிளம்பி விட்டதாக அதிர்ச்சி கொடுக்கிறார்.


அமுதா கெஞ்சி அழ பின்னால் ப்ளைட்டுக்கு சென்ற டாக்டர் திரும்பி வருகிறார். ஒரு புருஷனுக்கு கண் பார்வை கிடைக்கனுங்குறதுக்காக ஒரு பொண்ணு இவ்வளவு கஷ்டபட்டிருக்கா, இதை பார்த்துட்டு நான் அமெரிக்காவுக்கு போயி நான் என்ன பண்ண போறேன் என சொல்லியபடி ஆபரேஷன் தியேட்டரை ரெடி பண்ண சொல்ல அமுதா நன்றியுடன் அவரை பார்க்கிறாள்.


இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


அமுதாவும் அன்னலட்சுமியும்: சீரியலை எங்கு பார்ப்பது


அமுதவும் அன்னலட்சுமியும் சீரியல் 2022 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது.


மேலும் படிக்க | டப்பிங் பேசிக் கொண்டிருந்த போதே மாரிமுத்துக்கு மாரடைப்பு: எதிர்நீச்சல் திருச்செல்வம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ