அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல் அப்டேட்: தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘அமுதாவும் அன்னலட்சுமியும்' சீரியல்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அமுதாவும் அன்னலட்சுமியும்: இன்றைய எபிசோட்


ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும். வீட்டுக்கு வந்த பாட்டி அன்னத்தை வேலை வாங்கி வரும் நிலையில் இன்றைய எபிசோடில் நடக்கப் போவது என்ன என்பது குறித்து தெரிய வந்துள்ளது. 


மேலும் படிக்க | சூர்யாவின் அகரம் அறக்கட்டளையில் படித்த மாணவர் செய்த சாதனை..!


அதாவது, பாட்டி அன்னலட்சுமியிடம் அமுதா படிப்பு பற்றி கேக்க, அன்னம் என் மருமக படிக்க வேண்டாம் இந்த வீட்டை பார்த்துக்கிட்டா போதும் என சொல்கிறாள். பாட்டி அமுதாவிடம் உன்னை உன் புருஷனும், உங்க அத்தையும் நல்லா பார்த்துப்பேன்னு சொல்றாங்க, இதை தாண்டி நீ எதுக்காக படிக்கனும், அப்படி படிச்சா உன் வாழ்க்கைல என்ன மாற்றம் வரும்னு எனக்கு நிரூபிச்சி காட்டு அப்புறம் என் தீர்ப்ப்பை சொல்றேன் என சொல்கிறார். 


அதனை தொடர்ந்து அமுதா தனியாக அமர்ந்து யோசித்துக் கொண்டிருக்க, அதைப் பார்த்த மாணிக்கம் என்னாச்சு ஆத்தா ஏன் இப்படி உட்கார்ந்திருக்க என கேக்க, அமுதா பாட்டிக்கு தான் என்ன பதில் சொல்றதுன்னு தெரியலை , ஆனா எனக்கு படிக்கனும்னு என் மனசு தவிக்குது, அதை பண்ணாம விட்டா என்னால நிம்மதியா வாழ முடியாது சித்தப்பா என சொல்கிறாள். 


இதையடுத்து என் மனசுக்குள்ள இருக்குற வலியையும் வேதனையையும் மத்தவங்களுக்கு புரியுற மாதிரி என்னால வெளில சொல்ல முடியலை, அதனால தான் பாட்டி கேட்ட கேள்விக்கு என் மனசுக்குள்ள பதில் இருந்தும் என்னால சொல்ல முடியலை என்று சொல்ல மாணிக்கம் என்னமா அந்த அம்மா கேட்டதெல்லாம் எனக்கு கேள்வியா தெரியலை.. எல்லாரும் ஏன் படிக்கலைன்னு தான கேப்பாங்க, யாராவது படிக்க ஆசைப்படுறவங்களை பார்த்து ஏன் உனக்கு படிக்கனும்னு கேட்டுருங்காங்களா, எனக்கு தெரிஞ்சு உலகத்துலயே எவனும் அப்படி கேட்டிருக்க மாட்டான், நீ அந்த கேள்வியை அவங்க கிட்டயே கேளு என சொல்ல, அமுதா யோசிக்கிறாள். 


மறுநாள் காலையில் எழுந்து அமுதா அங்குமிங்கும் நடந்தபடி இருக்க அப்போது சிறுவயது கதிரேசன் போல பட்டை அணிந்து கண்ணாடி போட்டுக் கொண்டு ஒரு உருவம் அமர்ந்திருக்க அமுதாவை பார்த்ததும் என்ன அமுதா என்ன யோசிக்கிற , நீ படிக்கிறதுக்கு ஊர் உலகம் எல்லாரும் ஏத்துக்குற மாதிரி காரணம் சொல்ல முடியும், ஆனா இந்த குடும்பம் ஏத்துக்குற மாதிரி உன்னால காரணம் சொல்ல முடியலை அதான உன் பிரச்சனை என சொல்ல, அமுதா ஷாக் ஆகிறாள். 


பிறகு அமுதா அவனிடம் என் பிரச்சனை எப்படி உனக்கு தெரியும்.. உன் பிரச்சனை எனக்கு தெரியாம எப்படி இருக்கும், அந்த பிரச்சனைக்கு இந்த வீட்டுக்குள்ள தான் பதில் இருக்கு, அதை சொன்னா யாரு ஏத்துக்கிடனுமோ அவங்க ஏத்துப்பாங்க, கிட்டவா என சொல்ல அமுதா அவனருகே போக அவள் காதில் மியூட்டில் சொல்லும் பில்டப்ஸ். 


இதை கேட்டு அமுதா ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் பார்கக்க சிறுவன் மறைகிறான். பிறகு அமுதா பாட்டியிடம் ஒரு கதையை சொல்ல அந்த கதை கதிரேசனை பாட்டி எப்படி கஷ்டப்பட்டு படிக்க வைத்தார்கள் என்பதை ஒத்து போக, பாட்டி நெகிழ்கிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


அமுதாவும் அன்னலட்சுமியும்: சீரியலை எங்கு பார்ப்பது


அமுதவும் அன்னலட்சுமியும் சீரியல் 2022 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது.


மேலும் படிக்க | கோடிகளில் புரளும் சிவகார்த்திகேயன்...’மாவீரன்’ படக்குழுவின் சம்பள விவரம்..!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ