அம்பலமாகும் வடிவேலுவின் மாஸ்டர் பிளான்.. அமுதா எடுக்க போகும் முடிவு என்ன?
Amudhavum Annalakshmiyum August 8 Update: அம்பலமாகும் வடிவேலுவின் மாஸ்டர் பிளான்.. அமுதா எடுக்க போகும் முடிவு என்ன? அமுதாவும் அன்னலட்சுமியும் இன்றைய எபிசோட் அப்டேட்
அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல் அப்டேட்: தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘அமுதாவும் அன்னலட்சுமியும்' சீரியல்.
அமுதாவும் அன்னலட்சுமியும்: இன்றைய எபிசோட்
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும். நேற்றைய எபிசோடில் அன்னம் கண் விழித்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
மேலும் படிக்க | புஷ்பா 2: ஃபஹத் ஃபாசிலின் புதிய லுக்.. பிறந்தநாளில் வெளியான தெறி போஸ்டர்!
டாக்டர் அன்னத்தை check பண்ணிவிட்டு செந்திலிடம் இங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை நீங்க வீட்டுக்கு கூட்டிட்டு போலாம் என்று சொல்ல அனைவரும் சந்தோஷமாக அங்கே இருந்து அன்னத்தை அழைத்துக்கொண்டு செல்ல அமுதா பீல் செய்கிறாள்.
அமுதா பீல் பண்ணிவிட்டு அங்கே இருந்து போகும் முன் டாக்டர் அமுதாவிடம் நீங்க தானே அன்னத்தை அழைத்துக்கொண்டு வந்தது என்று கேட்க. அமுதா ஆமா என்று சொல்ல டாக்டர் அவங்களுக்கு எதாவது ப்ரெஸ்ஸர் இருக்கா? மாத்திரை எதாவது எடுக்குறாங்களா என்று கேட்க அமுதா இல்லை என்று சொல்கிறாள்.
அடுத்து டாக்டர் நேற்று தான் டெஸ்ட் ரிப்போர்ட் வந்துச்சு அவங்க 3 பிரஷர் மாத்திரைதை எடுத்து இருக்காங்க அதனாலதான் இந்த மாதிரி ஆகி இருக்கு என்று சொல்ல அமுதா ஷாக் ஆகிறாள். அமுதா இதை யாரு பண்ணி இருப்பா என்று சொல்லி யோசிக்க டாக்டர் அவங்கள நல்லபடியா பாத்துக்கோங்க என்று சொல்ல அமுதா சரி என்று சொல்லி அங்கே இருந்து கோபமாக கிளம்பி செல்கிறாள்.
அமுதா கோபமாக வீட்டுக்கு வந்து வடிவேல் அமுதா ரூமுக்கு சென்று தேட அமுதா வடிவேல் சட்டை பாக்கெட்டில் இருந்து ஒரு மருந்து வாங்கிய பேப்பரை எடுக்கிறாள். அமுதா அப்போ வடிவேல்தான் இந்த மாதிரி பண்ணி இருக்கான் என்று நினைத்து டென்சன் ஆகிறாள். அமுதா அனைவரையும் அழைப்பது. அனைவரும் அங்கே வர வேதா என்ன என்று விசாரிக்க அமுதா அத்தைக்கு இப்படி ஆக காரணம் வடிவேல் தான் என்று நடத்தை சொல்லி அந்த மருந்து பேப்பரை காட்டுகிறாள். இதையடுத்து அன்னம் வடிவேலை அடித்து வீட்டை விட்டு வெளியே அனுப்பபி மனம் உடைத்து போகிறாள்.
அதன் பிறகு அமுதா கதிரேசன் போட்டோவை பார்த்து மாமா உங்க பையன் அம்மான்னு கூட பாக்காம இப்படி ஒரு வேலையை பார்த்து இருக்கானே இதை போய் நான் சொன்னா வடிவேலை அடிச்சு வீட்டை விட்டு அனுப்பிட்டாங்க ..எனக்கு அவனை திருத்தணும்.அவன் நல்லவனா மாறனும் என்று பேசுகிறாள்.
அடுத்து பரமு அமுதாவை ஸ்கூலுக்கு போக கூடாது என்று சொல்ல வேதநாயகியும் நீ நல்ல மருமகளா இல்லை, ஸ்கூல் போக கூடாது என்று சொல்ல அமுதா அதிர்ச்சி அடைகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலை உங்கள் ஸி தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.
அமுதாவும் அன்னலட்சுமியும்: சீரியலை எங்கு பார்ப்பது
அமுதவும் அன்னலட்சுமியும் சீரியல் 2022 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது.
மேலும் படிக்க | விஜய் - சிவகார்த்திகேயன் படங்கள் மோதல்! அதுவும் இந்த தேதியிலா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ