Veera Serial Update Today Check Today's Plot: இந்த சீரியலின் முதல் எபிசோடான நேற்று தீபாவளி பண்டிகையுடன் சீரியல் தொடங்கிய நிலையில் வீரா அண்ணனுடன் ஆட்டோவில் வீட்டில் வந்து இறங்க நீ எதுக்குடி ஆட்டோ ஓட்டிட்டு வர என்று மற்ற தங்கைகள் எல்லோரும் வீராவை கலாய்க்கின்றனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதன் பிறகு அவர்கள் அண்ணன் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்க பாண்டியன் அவர்களுக்கு பணம் கொடுத்து ஆசீர்வாதம் செய்கிறான். அடுத்து எல்லோரும் படத்திற்கு கிளம்பி செல்கின்றனர். கண்மணியின் அவளது காதலும் ராஜேஷூம் பைக்கில் ஒன்றாக செல்கின்றனர். வாழ்க்கையை எப்படி எல்லாம் வாழ வேண்டும் என்று பல கனவுகளுடன் இவர்கள் பேசிக் கொண்டே செல்கின்றனர். 


அதனைத் தொடர்ந்து இவர்கள் படம் பார்த்து முடித்துவிட்டு ராஜேஷ் வீட்டிற்கு வர அங்கு கண்மணிக்கும் ராஜேஷுக்கும் நிச்சயதார்த்தம் நடக்கிறது. மறுபக்கம் மாறன் துணி கடைக்கு பின்னாடி சரக்கு அடித்துக் கொண்டே பிரியாணி சமைத்துக் கொண்டிருக்க அங்கு வரும் அண்ணன்களும் அத்தை லட்சுமியும் நல்ல துணி போட்டுக்க வேண்டியது தானே என்று சொல்ல நான் இப்படித்தான் இருப்பேன் என்று மாறன் பதில் கொடுக்கிறான். 


மேலும் படிக்க | கார்த்திகை தீபம்: ஆனந்துக்கு கல்யாணம்... குடும்பத்துக்கு காத்திருக்கும் அதிர்ச்சி..!!


பிறகு வீட்டில் ராமச்சந்திரன் இடம் மாறன் சமைத்த பிரியாணியை கொண்டு வந்து கொடுக்க அவர் பாய் சமைத்ததா என்று கேட்க இவர்கள் ஆமாம் என பொய் சொல்லி விடுகின்றனர். பிறகு மாறன் வீட்டுக்கு வர அத்தை லட்சுமி அவனை சாப்பிட கூப்பிட மாறன் அப்பா இருக்காரு நான் அப்புறம் சாப்பிடுறேன் என்று சொல்கிறான். 


இருந்தாலும் லட்சுமி அவனைக் கூப்பிட்டு உட்கார வைத்து சாப்பாடு போட்டு எப்படி இருக்கு என்று கேட்க நான் சமைத்த பிரியாணி தானே நல்லா தான் இருக்கும் என்று சொல்ல அதைக் கேட்ட ராமச்சந்திரன் சாப்பிடுவதை நிறுத்தி விடுகிறார். கடைக்கு முன்னாடி ஆட்டம் போட்ட விஷயத்தை எல்லாம் சொல்லி மாறனை கண்டபடி திட்டி எழுந்துக்க நீங்க உக்காருங்க நான் போறேன் என்று மாறன் அங்கிருந்து வெளியேறுகிறான். 


இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய வீரா சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


மேலும் படிக்க | Maari Serial : தாராவின் சதியை முறியடித்த சாமுண்டீஸ்வரி.. கோவில் திருவிழாவில் காத்திருந்த ட்விஸ்ட்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ