அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல் அப்டேட்: தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘அமுதாவும் அன்னலட்சுமியும்' சீரியல்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அமுதாவும் அன்னலட்சுமியும்: இன்றைய எபிசோட்


ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும். இந்த சீரியலில் அன்னம் அமுதா தன்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என சொல்லி இருந்த நிலையில் இன்றைய எபிசோடில் நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.


மேலும் படிக்க | D50: தனுஷின் 50ஆவது படத்தில் இணையும் த்ரிஷா? இருவரும் மும்பையில் உள்ளதாக தகவல்!


அதாவது, அமுதா மேடையில் ஏறி மன்னிப்பு கேக்க வர அமுதா தன் காலில் விழுந்து மன்னிப்பு கேக்க வேண்டும் என வடிவேலு சொல்கிறான். மாணிக்கம் அன்னலட்சுமியிடம் வடிவேலு பண்றது ரொம்ப தப்பு என எச்சரிக்கிறான்.


இதையடுத்து அமுதா மன்னிப்பு கேக்க போக , சிதம்பரம் வேண்டாம் என தடுக்கிறார். மேலும் என் பொண்ணால தான் உங்களுக்கு இம்புட்டு கவுரமும், அவளைப் போய் அந்த திருட்டு பய கால்ல விழச் சொல்றீங்க என அன்னலட்சுமியை சாட அன்னலட்சுமி கோபத்துடன் அங்கிருந்து வெளியேறுகிறாள். 


அதன் பிறகு அன்னலட்சுமி வீட்டிற்கு வந்து சிதம்பரம் பேசியதை நினைத்து வருந்துகிறாள். அப்போது வடிவேலு அன்னலட்சுமியிம் நீ ஏம்மா ஆசிர்வாதம் பண்ணாம வந்த என கேட்க அமுதா ஏன் அவ அப்புச்சி பேசும் போது வேடிக்கை பார்த்துகிட்டிருந்தா? நமக்கு கிடைக்க வேண்டிய அதிகாரத்துல அவ இருந்து கிட்டு நம்மளுக்கு எதுவும் செய்ய மாட்டேன்னு அடம் பிடிக்கிறா என அன்னலட்சுமியை ஏற்றி விடுகிறான்.


இதனை தொடர்ந்து செந்தில் அன்னலட்சுமியிடம் ஏம்மா அங்க இருந்து வந்த என கேக்க, என்னை விட அவ அப்புச்சி உனக்கு பெருசா போயிட்டாரு என கோபப்பட உன் பொண்டாட்டி கரஸ்பாண்டண்ட் ஆயிட்டா நாங்க எல்லாம் அவளுக்கு கை கட்டி நிக்கனுமா? அதெல்லாம் பள்ளிக் கூடத்தோட வச்சுக்க சொல்லு என ஆவேசப்படுகிறாள். 


இதனால் மாணிக்கம் நல்லா இருந்த குடும்பத்தை நாசமாக்குனதே நீ தாண்டா என வடிவேலுவை திட்ட அன்னலட்சுமி கோபத்தில் மாணிக்கத்தை அடிக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


அமுதாவும் அன்னலட்சுமியும்: சீரியலை எங்கு பார்ப்பது


அமுதவும் அன்னலட்சுமியும் சீரியல் 2022 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது.


மேலும் படிக்க | ‘லியோ’ முதல் ‘விடா முயற்சி’ வரை..இந்த மாதம் வெளியாகவுள்ள தமிழ் சினிமா அப்டேட்ஸ்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ