தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சந்தியா ராகம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் தனம், மாயா மற்றும் ஷாரு என மூவருக்கும் இடையே பொங்கல் வைக்கும் போட்டி நடந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதாவது, படையல் போட்டு பூஜை முடிந்ததும் முதலில் ஷாருவின் பொங்கலை டேஸ்ட் செய்து பார்க்கின்றனர், அதில் உப்பு அதிகமாக இருப்பதாக சொல்ல ஷாரு ஷாக்காகி நிற்கிறாள். அடுத்து தனத்தின் பொங்கலை டேஸ்ட் செய்து நன்றாக இருப்பதாக சொல்கிறார் ரகுராம். 


மேலும் படிக்க | Aranmanai 4 : பேய் படமா? காமெடி படமா? அரண்மனை 4 எப்படியிருக்கு? ட்விட்டர் விமர்சனம்!


பிறகு மாயாவின் பொங்கலை டேஸ்ட் செய்ய போக அதான் தனத்தோட பொங்கல் நல்லா இருக்குனு சொல்லிடீங்களே, அப்புறம் எதுக்கு மாயாவை சாப்பிடணும்? அதுவும் இல்லாமல் அவளுக்கு சமைக்கவும் தெரியாது அதனால் எப்படியும் நல்லா இருக்காது என்று சொல்ல ரகுராம் போட்டின்னு வந்துட்டா எல்லாருடைய சமையலையும் வச்சி தான் முடிவு செய்ய முடியும் என்று சொல்கிறார். 


பிறகு தனத்தின் பொங்கலை சாப்பிட்டு சூப்பர் என்று பாராட்டுகிறார். தனத்தின் பொங்கலை விட மாயாவோட பொங்கல் நல்லா இருப்பதாக சொல்கிறார். அதுமட்டுமின்றி தனத்திற்கு எல்லா வேலையும் தெரியும். ஆனால் மாயாவுக்கு அப்படி இல்ல.. அப்படியிருக்கும் போது அவ இதை கத்துக்கிட்டு செய்திருக்கா அதனால் அவ தான் வெற்றி பெற்றதாக சொல்லி தங்க மோதிரத்தை பரிசாக கொடுக்கிறார். 


பிறகு ஷாரு தனத்தை கூப்பிட்டு வைத்து நீயும் தானே நல்லா சமைச்ச அப்படியிருக்கும் போது மாயாவுக்கு பரிசு கொடுக்கிறாங்க. இப்படியே விட்டா மாயா உன்னோட இடத்தை பிடிச்சிருவா. அப்புறம் எல்லாரும் அவளை தான் தலையில் தூக்கி வச்சி கொண்டாடுங்க என்று சொல்லி தனத்தின் மனதில் நஞ்சை விதைக்கிறாள். 


இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சந்தியா ராகம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


மேலும் படிக்க | OTT Releases : அரண்மனை 4 to ரசவாதி..ஓடிடியில் வெளியாகும் புத்தம் புதிய படங்கள்! எதை, எதில் பார்ப்பது?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ