Aranmanai 4 : பேய் படமா? காமெடி படமா? அரண்மனை 4 எப்படியிருக்கு? ட்விட்டர் விமர்சனம்!

Aranmanai 4 Twitter Review Tamil : சுந்தர்.சி இயக்கியிருக்கும் அரண்மனை 4 திரைப்படம் இன்று வெளியாகியுள்ளதை அடுத்து, இப்படம் குறித்த விமர்சனங்கள் ட்விட்டரில் வெளியாகி வருகிறது.   

Written by - Yuvashree | Last Updated : May 3, 2024, 01:56 PM IST
  • சுந்தர்.சி இயக்கத்தில் வெளியாகியிருக்கிறத் அரண்மனை 4
  • ராஷி கண்ணா, தமன்னா ஆகியோர் நடித்திருக்கின்றனர்
  • இந்த படத்திற்கு ரசிகர்கள் கொடுத்துள்ள விமர்சனம்
Aranmanai 4 : பேய் படமா? காமெடி படமா? அரண்மனை 4 எப்படியிருக்கு? ட்விட்டர் விமர்சனம்! title=

Aranmanai 4 Twitter Review Tamil : தமிழ் திரையுலகின் முக்கிய இயக்குநர்களுள் ஒருவராக இருப்பவர், சுந்தர்.சி. கமர்ஷியல்-காமெடி படங்களுக்கு பெயர் பெற்ற இவர், பேய் படங்களையும் இயக்கி வருகிறார். அந்த வகையில் அவர் சமீபத்தில் இயக்கியிருக்கும் படம்தான், அரண்மனை 4. 

அரண்மனை 4:

அரண்மனை படத்தின் முதல் பாகம் 2014ஆம் ஆண்டு வெளியானது. முதல் பாகம் வெற்றி பெற்றதை தொடர்ந்து, அரண்மனை படத்தை ஒரு சீரீஸ் ஆகவே எடுக்க ஆரம்பித்து விட்டார் சுந்தர்.சி. ஒரு பெரிய பங்களா, அதில் வந்து தங்கும் பெரிய குடும்பத்தினர், அவர்களை கொல்ல நினைக்கும் பேய், இந்த டெம்ப்ளேட்தான் வழக்கமாக அரண்மனை படங்களின் கதையின் டெம்ப்ளேட்டாக இருக்கிறது. கடந்த 2021ஆம் ஆண்டு, அரண்மனை படத்தின் 3ஆம் பாகம் வெளியான நிலையில், இன்று அரண்மனை 4 வெளியாகியிருக்கிறது. இதில், தமன்னா, ராஷி கண்ணா, சந்தோஷ் பிரதாப், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். 

ரசிகர்களின் விமர்சனம்..

கடைசியாக வெளிவந்த அரண்மனை 3 திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பினை பெறவில்லை. இந்த நிலையில், இப்படத்திற்கும் அதே நிலை தொடரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், படம் பார்த்த ரசிகர்கள் இப்படத்திற்கு நல்ல விமர்சனத்தையே கொடுத்திருக்கின்றனர். அவர்களின் ட்விட்டர் விமர்சனத்தை பார்க்கலாம். 

முதல் பாதி ஓகே!

அரண்மனை படத்தின் முதல் பாதியை பார்த்த ஒரு ரசிகர், தந்து விமர்சனத்தை ட்விட்டரில் தெரிவித்திருக்கிறார். 

அதில், முதல் பாதி விறுவிறுப்பாக இருப்பதாகவும், காமெடி காட்சிகளை தவிர ஹாரர் காட்சிகள் நிறைய இருப்பதாகவும், விஎஃபெக்ஸ் நன்றாக இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். மேலும், நகைச்சுவை காட்சிகள் ஆங்காங்கே வர்க் அவுட் ஆவதாகவும் ஹிப் ஹாப் ஆதியின் பின்னணி இசை படத்துடன் ஒன்றுவதாகவும் அந்த ரசிகர் கூறியிருக்கிறார்.

டீசண்டா இருக்கு!

ஒரு ரசிகர், அரண்மனை 4 படத்தின் முதல் பாகம் டீசண்டாக இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.

அரண்மனை 4 படத்தின் முதல் நாள் முதல் காட்சி முக்கால்வாசி ஹவுஸ் ஃபுல்லாக இருப்பதாகவும், குடும்பமாக இப்படத்தை பார்க்க வருவதை பார்க்கும் போது ஆச்சரியமாக இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். முதல் பாதி ஓரளவிற்கு நன்றாக இருப்பதாகவும் அந்த ரசிகர் கூறியிருக்கிறார். 

மேலும் படிக்க | ரஜினியின் வாழ்க்கை வரலாறு திரைப்படம்! ஹீராேவாக நடிக்க இருப்பது யார்?

புது கான்சப்ட்!

இதுவரை ஒரே டெம்ப்ளேட்டாக இருந்த அரண்மனை படத்தின் கதை, இந்த படத்தில் சற்று மாறியிருக்கிறது. இந்த படத்தில், ‘பாக்’ என்ற புதிய பேய் குறித்து கூறியிருக்கின்றனர். அதனால், இது புதிதாக இருப்பதாக ஒரு ரசிகர் தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், படத்தின் கதை மற்றும் விஎஃப்எக்ஸ் காட்சிகளை பாராட்டியிருக்கிறார். மேலும், பிற படங்களை போல அல்லாமல், பாக் படத்தின் கான்செப்ட் புதுமையாக இருப்பதாக அந்த ரசிகர் குறிப்பிட்டிருக்கிறார்.

நேர்த்தியான திரைக்கதை:

அரண்மனை படத்தின் முதல் பாதியை பார்த்த ஒரு ரசிகர், படத்தின் த்ரில்லர் காட்சிகள் நன்றாக எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருக்கிறார். படத்தின் திரைக்கதை நேர்த்தியாகவும் சுவாரஸ்யமாகவும் இருப்பதாகவூம் சில நகைச்சுவை காட்சிகள் ஓரளவிற்கு நன்றாக இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். 

படத்தில் கொஞ்சம் மிகைப்படுத்தப்பட்ட காட்சிகள் இருப்பதாகவும் அந்த ரசிகர் குறிப்பிட்டிருக்கிறார். 

மேலும் படிக்க | அண்ணாமலையின் வாழ்க்கை வரலாறு படமாகிறது! ஹீரோவாக நடிப்பது யார் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News