இந்தியாவிலிருந்து பொருட்களை கொண்டு வர படகுகள் தயாராக உள்ளது: இலங்கை அமைச்சர்
இந்தியாவிலிருந்து பொருட்களை கொண்டு வருவதற்கு நாணய மாற்று விஷயத்தில் மாத்திரமே சிக்கல் காணப்படுவதாகவும், பொருட்களை ஏற்றி வர படகுகள் தயாராக உள்ளது எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
இந்தியாவிலிருந்து பொருட்களை கொண்டு வருவதற்கு நாணய மாற்று விஷயத்தில் மாத்திரமே சிக்கல் காணப்படுவதாகவும், பொருட்களை ஏற்றி வர படகுகள் தயாராக உள்ளது எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் இடம் பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இந்த விஷயத்தை குறிப்பிட்டுள்ளார்.
எரிபொருள் பற்றாக்குறை நாட்டில் நிலவுவதால், அத்தியாவசிய தேவைகளை முன்னெடுப்பது என்ற தீர்மானம் நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்டது.
மேலும் படிக்க | இந்தியா தந்தது தானம் இல்லை; கடன் உதவி: இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க
வரயிருக்கும் 10ம் தேதிக்கு பின்னர் நிலைமையில் முன்னேற்றம் ஏற்படும் எனும் அடிப்படையல்தான் அந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.
பொருளாதார நெருக்கடியை தீர்ப்பதற்கு நான் கூறிவருவது போன்று இந்தியாவிலிருந்து அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதன் ஊடாக வடக்கு மாகாணம், அதற்கு மேலாக வடமத்திய மாகாணம் நன்மையை பெறும். அது விரைவில் நடைபெறும் என நம்புகிறேன் என தெரிவித்தார்.
இந்தியாவிலிருந்து பொருட்களை ஏற்றி வருவது தொடர்பில் அமைச்சரவையில் ஆதரவு கிடைத்துள்ளதா என ஊடகவியலாளர் வினவினார். அதற்கு பதிலளித்த அமைச்சர் கூறுகையில் அதில் எவ்விதமான தடையும் இல்லை. கடைசியாக பாதுகாப்பு அமைச்சகத்தின் அனுமதி தேவை என்று கூறப்பட்டது. அதுவும் பெறப்பட்டுள்ளது.
ஆனால், நாணய மாற்று விஷயத்தில் மாத்திரமே இழுபறி நிலை காணப்படுகின்றது. அதனை சீர் செய்வோமே ஆனால், எந்த நேரத்திலும் வரும். அதற்காக படகுகள் தயார் நிலையில் உள்ளதாக அவர் தெரிவித்தார்.
முன்னதாக, நெருக்கடி நிலையிலிருந்து இலங்கை மீண்டெழுவதற்கு அதிகபட்ச ஒத்துழைப்புகளை நெருங்கிய நட்பு நாடு என்ற அடிப்படையில் இந்திய அரசாங்கம் வழங்கும் என இந்திய வெளியுறவு செயலாளர் வினய் குவாத்ரா தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு சென்ற இந்திய அரசாங்கத்தின் வெளியுறவு செயலாளர் வினய் குவத்ரா உள்ளிட்ட குழுவினர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவையும், அதிபர் கோட்டாபாய ராஜபக்சவையும் சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
மேலும் படிக்க | இலங்கை இந்திய ஒப்பந்தம் பற்றி இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR