இலங்கை இந்திய ஒப்பந்தம் பற்றி இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

கிளிநொச்சியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பதிலளித்தார்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 18, 2022, 12:27 PM IST
  • இலங்கை இந்திய ஒப்பந்தம் குறித்து இலங்கை அமைச்சர்.
  • ஒப்பந்தம் பிரபாகரன் உள்ளடங்கலாக சகல இயக்கங்கள், சகல கட்சிகளிற்கும் வாழைப்பழத்தை உரித்து வாயில் கொடுத்தது போன்றது: அமைச்சர்
  • நான் சொன்னதனை கேட்டிருந்தால் பிரபாகரன் அடங்கலாக இவ்வறவு அழிவுகள், இழப்புகள், துன்பங்கள், துயரங்கள் வந்திருக்காது: அமைச்சர்.
இலங்கை இந்திய ஒப்பந்தம் பற்றி இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா  title=

இலங்கை இந்திய ஒப்பந்தம் என்பது பிரபாகரன் உள்ளடங்கலாக சகல இயக்கங்கள் மற்றும் சகல கட்சிகளுக்கும் வாழைப்பழத்தை உரித்து வாயில் கொடுத்தது போன்றது. ஆனால் பிரபாகரன் உட்பட அதனை அதனை உட்கொள்ளாமல் துப்பிவிட்டனர் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார். 

மாகாணங்களுக்கு அதிகாரங்கள் கொடுக்கப்படவில்லை என தமிழ்த்தரப்புக்கள் தெரிவித்து வரும் நிலையில், இவ்வாறான முயற்சிக்கு மத்திய அரசு அதிகாரமளிக்கும் என நம்புகின்றீர்களா என அவரிடம் வினவியபோது, கரைப்பவன் கரைத்தால் கல்லும் கரையும் என நீண்ட காலமாக நான் சொல்லியும் வந்திருக்கின்றேன். செய்தும் வந்திருக்கின்றேன். இந்தியாவிலிருந்து இலங்கை திரும்பியபோது நான்கு விஷயங்களை முன்வைத்திருந்தேன். 

மேலும் படிக்க | Live Update: 2022 ஜூன் 18 இன்றைய முக்கிய செய்திகள் 

இந்திய இலங்கை ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டு தேசிய நீரோட்டத்தில் கலந்துகொண்டு நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு ஊடாக தேசிய நீரோட்டத்தில் இந்த பிரச்சினைக்கு தீர்வு எட்டலாம் என நான் முன்வைத்து வந்தேன்.

 அதனை நான் செய்தும் வந்தேன். துர்ரதிஷ்டவசமாக மக்கள் ஆணை எனக்கு போதிய அளவு கிடைக்காமையால் என்னுடைய அரசியல் பலத்திற்கு ஏற்ப நான் செய்து வருகின்றேன்.  மாகாண சபை முறைமையே சிறந்த ஆரம்ப புள்ளி என சொல்லி வந்தேன். ஆனால் எந்த மண்ணில் பிறந்து எந்த மண்ணிலிருந்து பேட்டி எடுக்கின்றீர்களோ அங்கு இருந்த இயக்கமும், அதற்கு ஆதரவான தமிழ்க் கட்சிகளும் அந்த செயற்பாடு துரோகத்தனமானது நடைமுறை சார்த்தியம் இல்லை என்றெல்லாம் சொன்னார்கள்.

ஆனால் சமீபத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் இந்திய பிரதமர் மோடியிடம் மாகாண சபை தொடர்பில் கையொப்பமிட்டு அனுப்பியிருந்தார்கள். நான் 87ம் ஆண்டு சொன்னதனை கேட்டிருந்தால் பிரபாகரன் அடங்கலாக இவ்வறவு அழிவுகள், இழப்புகள், துன்பங்கள், துயரங்கள் வந்திருக்காது.

அதாவது இலங்கை இந்திய ஒப்பந்தம் என்பது, பிரபாகரன் உள்ளடங்கலாக சகல இயக்கங்கள், சகல கட்சிகளிற்கும் வாழைப்பழத்தை உரித்து வாயில் கொடுத்தது போன்றது. ஆனால் பிரபாகரன் உட்பட அனைவரும் அதனை துப்பிவிட்டனர். அன்று அதனை ஏற்றிருந்தால் இன்று இந்த நிலை வந்திருக்காது என்பதை திரும்பவும், திரும்பவும் இந்த மண்ணிலிருந்து சொல்கின்றேன் என தெரிவித்தார்.

மேலும் படிக்க | ஆபத்தை உணராமல் இடம்பெயர முற்படும் இலங்கை மக்கள்; எச்சரிக்கும் கடற்படையினர் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News