கனடா உயர் படிப்புக்கான சிறந்த நாடுகளில் ஒன்றாக கருதப்படுகிறது. உலகம் முழுவதிலுமிருந்து ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் கனடா பல்கலைக்கழகங்களில் கலவி கற்க செல்கின்றனர். இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. இந்நிலையில், கனடாவின் குடிவரவு அமைச்சர் சீன் ப்ரேசர், மாணவர் விசா விண்ணப்பங்களை விரைந்து செயல்படுத்த  தனது துறை முன்னுரிமை அளிக்கும் என்று கூறினார். இந்த செமஸ்டரில் கனடா பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் சேர்ந்துள்ள ஆயிரக்கணக்கான மாணவர்கள் தங்கள் குடியேற்ற அனுமதிகளுக்காக பதற்றத்துடன் காத்திருக்கும் நிலையில், அவர்களுக்கு நிம்மதி அளிக்கும் வகையில் இந்த செய்தி வெளியாகியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மாணவார்களுக்கான விசா அனுமதி குறித்து மேலும் கூறிய  அவர், "தொழிலாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய முடிந்தவரை வேலை அனுமதிகளை செயலாக்குவதில் நாங்கள் கோடை காலத்தில் கவனம் செலுத்தி வந்தோம். ஆகஸ்ட் மாதத்தில், 104,000 கூடுதல் கல்விக்கான அனுமதிகளை நாங்கள் செயல்படுத்தப் திட்டமிட்டுள்ளோம்," என்று ஃப்ரேசர் கூறினார். கனடா சென்று கல்வி பயிலும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை இது வரை இல்லாத அளவில் பெரிதும் அதிகரித்துள்ள நிலையில், மாணவர் விசா தாமதமாகிறது கவலை அளிப்பாதாக, ஒட்டாவாவில் உள்ள இந்திய தூதரகத்திடம் இருந்து சமீபத்தில் புகார் அளிக்கப்பட்டது.



கனடா பல்கலைக்கழகங்களில் படிக்கத் தொடங்கும் மாணவர்களுக்கான வழிகாட்டுதல்களை இந்தியத் தூதரகம் வெளியிட்டுள்ளது. ஒட்டாவாவில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் தாமதமான விசாக்கள் மற்றும் அனுமதிகளைப் பற்றி ஆராய அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளது. ஒட்டாவாவில் உள்ள அதிகாரிகள் மற்றும் டொராண்டோ மற்றும் வான்கூவரில் உள்ள துணைத் தூதரகங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்கள் உட்பட கனடா கல்வி நிறுவனங்களுடன் இந்த பிரச்சினை தொடர்பாக தொடர்பில் உள்ளனர்.


"இந்தச் சிக்கல்களையும், இந்திய மாணவர்கள் ஏற்கனவே கனடா நிறுவனங்களில் கல்விக் கட்டணத்தை டெபாசிட் செய்திருப்பதையும் முன்னிலைப்படுத்தி, இந்தியாவிலிருந்து வரும் மாணவர்களுக்கான விசா விண்ணப்பங்களை விரைவாகச் செயல்படுத்துமாறு கனடா அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தோம்" என்று இந்திய தூதரகம் செய்தி வெளியிட்டுள்ளது.

 


மேலும் படிக்க | இந்திய மாணவர்களுக்கு விரைவில் முன்னுரிமை விசா: இங்கிலாந்து தூதரகம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ