தமிழால் இணைவோம் என்பதன் அடிப்படையில், தமிழக எல்லையைத் தாண்டி திரைகடல் தாண்டியும் திரவியம் தேடும் தமிழர்களை ஒன்று சேர்க்கும் வகையில் தமிழக அரசு அயலக தமிழர் தினத்தை கொண்டாடிவருகிறது. கடந்த ஆண்டு முதல், ஜனவரி 12ஆம் நாள் அயலகத் தமிழர் நாளாக தமிழ்நாடு அரசால் அனுசரிக்கப்படுகிறது. ஒவ்வோர் ஆண்டும் சிறப்பு நிகழ்ச்சிகளுடன் கொண்டாடப்படும் என்பதன் அடிப்படையில், இந்த ஆண்டும், தமிழக அரசு பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வெளிநாடுகளிலும், வெளி மாநிலங்களிலும் உள்ள தமிழர் நல சங்கங்கள் அனைத்தையும் ஒருங்கிணைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் இந்த முன்முயற்சி உதவுகிறது. அயலகத் தமிழர்கள் தங்கள் சொந்த ஊர்களில் கட்டமைப்புகளின் மேம்பாட்டுக்கு உதவ 'தாய் மண் திட்டம்' என்ற அற்புதமான திட்டத்தையும் அயலக தமிழர் தினம் மூலம் வெற்றிகரமாக நிறைவேற்றலாம். 


மூத்த மொழியான தமிழுக்கு இருக்கும் வல்லமையானது, சாதி மதங்களைக் கடந்து அனைவரையும் இணைக்கும் வல்லமை கொண்டது என்பதற்கான எடுத்துக்காட்டாக அயல்க தமிழர் தினம் அமைகிறது. இந்த ஆண்டு, தமிழக அரசு மேற்கொண்டுள்ள அயலக தமிழர் தின நிகழ்ச்சிகள் இவை.


மேலும் படிக்க | ரயில் பயணத்தில் இவர்களுக்கு உணவு, தண்ணீர் இலவசம்! 90% பேருக்கு தெரிவதில்லை


2ஆம் ஆண்டு அயலகத் தமிழர் தினம் 2023 நிகழ்வுகள்


அயலகத் தமிழர்களுக்கான நலத்திட்டங்களை துவக்கி வைக்கப்படும். இரண்டாம் ஆண்டு அயலகத் தமிழர் தினத்தை முன்னிட்டு, பேச்சுப் போட்டி, திருக்குறள் வினாடிவினா மற்றும் பாரதியார் பாடல்கள் ஒப்புவித்தல் போன்ற போட்டிகளில் கலந்து கொள்ள இணையவழியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 


உள்ளுர் மற்றும் அயலக உலகத்தமிழர்களிடையே (தொழில் முனைவோர்) இணைப்புகளை ஏற்படுத்துதல் மற்றும் அயலக இந்திய வம்சாவளி தமிழர்களுக்கு பாதுகாப்பான முதலீடு தொடர்பான ஆலோசனை வழங்கும் வகையில் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
 
அயலகத் தமிழர்களிடையே தமிழ் மொழியின் தொன்மை, வளர்ச்சி, கலை மற்றும் வரலாற்று சிறப்புமிக்க இடங்களுக்கு, இரண்டு நாட்கள் சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.மேலும், நாட்டுப்புறப் பாடல், செவ்வியல் மற்றும் திரைப்பட பாடல்கள் தொடர்பான கலை நிகழ்ச்சிகள் நடத்துதல், இயல், இசை, நாடகம் என முத்தமிழ் நிகழ்ச்சிகள் மற்றும் புத்தக கண்காட்சிக்கு ஏற்பாடு செய்தல் என தமிழக அரசு பல முயற்சிகளை முன்னெடுத்துள்ளது. 


“அயலகத் தமிழர்கள் தான் பிறந்து வளர்ந்த சொந்த ஊரில் உள்ள கல்வி, மருத்துவம் போன்ற அத்தியாவசிய தேவைகளின் உள்கட்டமைப்புகளை மேம்படுத்திட, “தாய் மண்” என்கின்ற திட்டம் தொடங்கிவைக்கப்படும்.  


 


மேலும் படிக்க | ஒரே நாளில் இவ்வளவு புக்கிங்கா? புத்தாண்டில் OYO-வில் குவிந்த கூட்டம்!  


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ