கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் தேவசகாயம் பிள்ளை. இவர் புனித பட்டம் பெற தகுதியானவர் என கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட நிலையில், அவருக்கு கத்தோலிக்க திருச்சபையில் இத்தாலியிலுள்ள வாடிகன் நகரிலுள்ள ரோம்  நகரில் நடைபெறும் நிகழ்ச்சியில் போப் பிரான்சிஸ், இன்று புனிதர் பட்டம் வழங்குகிறார். கடந்த 2020ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மறைசாட்சி தேவசகாயத்தை புனிதராக போப்பாண்டவர் ஏற்றுக் கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில், ரோமில் தேவசகாயம் பிள்ளைக்கு, புனிதர் பட்டம் வழங்கப்படும் நிலையில், அங்கு தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. தமிழகத்தை சேர்ந்த ஒருவர் புனித பட்டம் பெறுவது வரலாற்றிலேயே முதல்முறை என்பதால், இது அனைவர் கவனத்தையும் ஈர்த்துள்ளது.அவரை கவுரவப்படுத்தும் வகையில், தமிழக அரசு சார்பில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் கே.எஸ்.மஸ்தான் ரோம் சென்றுள்ளார்.



மேலும் படிக்க | இந்தியா-UAE தடையற்ற வாணிப ஒப்பந்தம் MSME துறைக்கு ஊக்கம் அளிக்கும்


மேலும், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் டி. மனோதங்கராஜ், சிறுபான்மை நலத்துறை தலைவர் பீட்டர் அல்போன்ஸ் ஆகியோரும் வாடிகனில் நடக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர். 



முன்னதாக, கன்னியாகுமரி மாவட்டம், காற்றாடி மலையில் தமிழக, கேரள மக்கள் சிறப்பு பிராத்தனை நடத்தினர். இந்த விழாவுக்காக காற்றாடி மலை அருகே பிரமாண்டமான பந்தல் அமைக்கப்பட உள்ளது எனவும், இந்த விழாவில் சுமார் 1 லட்சம் மக்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், கோட்டார் மறை மாவட்ட ஆயர் நசரேன் சூசை கூறினார்.


கிறிஸ்தவ வரலாற்றில் முதல் முதலாக தமிழராகிய தேவசகாயம் புனிதர் பட்டம் பெறுவது கன்னியாகுமரிக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் பெருமை சேர்த்துள்ளது எனவும் கோட்டார் மறை மாவட்ட ஆயர் நசரேன் சூசை கூறினார்.


தேவசகாயம் பிள்ளை, 18 ஆம் நூற்றாண்டில் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய ஒரு இந்து. சாதி வேறுபாடுகள் களையப்பட்டு, அனைத்து மக்களும் சமத்துவத்தை நோக்கி பயணிக்க வேண்டும் என அவர்  தொடர்ந்து வலியுறுத்தினார்.  1749 இல் கைது செய்யப்பட்ட அவர், பெரும் துன்பங்களையும் சித்திரவதைகளையும் தாங்கி,  1752, ஜனவரி 14ம் தேதி  சுடப்பட்டு இறந்த நிலையில், தியாகி என்ற பட்டத்தை பெற்றார் என்று வாடிகன் சென்ற ஆண்டு  செய்தி குறிப்பை வெளியிட்டுள்ளது.


மேலும் படிக்க | இலங்கையில் நீடிக்கும் கலவரம், தொடரும் பதற்றம்: அச்சத்தில் மக்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYe