இந்தியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இடையே சாதகமான ஒப்பந்தம் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ள நிலையில், இந்த பல்நோக்கு ஒப்பந்தம் குறித்து வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் கூறுகையில், இரு நாடுகளுக்குஇடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம், இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகத்தை அதிகரிப்பதோடு, இந்தியாவிற்கும் பயனளிக்கும்.
இந்தியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இடையேயான இந்த ஒப்பந்தம் குறித்து, மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், "இந்தியா-யுஏஇ வர்த்தக ஒப்பந்தம், MSME என்னும் சிறு, குறு, நடுத்தர தொழில்துறைக்கு ஊக்கமளிக்கும் என்றார். இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் பெருகுவதோடு, ஸ்டார்ட்அப்களுக்கு பல வாய்ப்புகள் உருவாகும். இந்தியா தற்சார்பு மிக்க நாடாக உருவெடுத்து வரும் நிலையில், ஏற்றுமதியாளர்கள் மீதான நம்பிக்கையும் அதிகரிக்கும் என்றார்.
மேலும் படிக்க | LIC IPO: முதலீட்டு வாய்ப்பை தவற விடாமல் இருக்க இன்றே பான் எண்ணை அப்டேட் செய்யவும்!
மேலும், "உலக அரங்கில் போட்டியிட நாடு தயாராக உள்ள நிலையில், தளவாடச் செலவைக் குறைப்பதே எங்கள் இலக்கு. இதனை நோக்கி செயல்படும். PM கதிசக்தி யோஜனா நாட்டின் வளர்ச்சிக்கான வரைபடமாகும்" என்று மத்திய அமைச்சர் கூறினார். இதனுடன், மத்திய அமைச்சர் கூறுகையில், "விரிவான பொருளாதார கூட்டாண்மை ஒப்பந்தம் (CEPA) மே மாதத்தில் நடைமுறைக்கு வரலாம். முதல் நாளிலிருந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸிற்கான ஏற்றுமதிகள் சுமார் 90 சதவீத இந்திய ஆர்வமுள்ள தயாரிப்புகளுக்கு வாய்ப்பு அளிக்கப்படும்" என்றார்.
புதிய வர்த்தக ஒப்பந்தத்தால் பார்மா துறையும் பயனடையலாம் என்றும் பியூஷ் கோயல் கூறியுள்ளார். இது ஒரு குறிப்பிடத்தக்க புதிய ஒப்பந்தம் என்று கூறிய அவர் முதல் முறையாக மருந்துத் துறைக்கும் பயனளிக்கும் வகையில் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றார். இது ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இந்திய தயாரிப்புகளுக்கான வாய்ப்பை அதிகரிக்கும் என்றார்.
இந்தியாவில் சிறுதொழில்களை விரிவுபடுத்துவதற்கான பலன்கள் பற்றிய தகவல்களை அளித்த அவர், "இந்த ஒப்பந்தம் ஜவுளி, கைத்தறி, கற்கள் மற்றும் நகைகள், தோல் மற்றும் காலணி போன்ற தொழிலாளர் மிகுந்த துறைகளில் 10 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கும்" என்றார்.
அதே நேரத்தில், மருந்துத் துறைக்கு இந்த ஒப்பந்தத்தின் நன்மைகள் குறித்து பியூஷ் கோயல் கூறுகையில், "ஐரோப்பிய யூனியன், இங்கிலாந்து, கனடா அல்லது ஆஸ்திரேலியாவில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மருத்துவ தயாரிப்புகளை சமர்ப்பித்த 90 நாட்களுக்குள் அங்கீகரிக்க ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஒப்புக் கொண்டுள்ளது" என்றார்.
மேலும் படிக்க | முதலீட்டாளர்களுக்கு நற்செய்தி, இந்த தேதி வெளிவருகிறது LIC IPO: முக்கிய அம்சங்கள் இதோ
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR