துபாய்: துபாய் குடியிருப்பு கட்டிடத்தில் சனிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் 16 பேர் உயிரிழந்தனர் மற்றும் ஒன்பது பேர் காயமடைந்தனர், இதில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டை சேர்ந்த இமாம் காசிம், முகம்மது ரஃபீக் ஆகியோர் தீ விபத்தில் உயிரிழந்தனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

துபாய் டெய்ரா புர்ஜ் முரார் (Deira Burj Murar) அல் ராஸ் பகுதியில் பல மாடி குடியிருப்பு கட்டிடம் அமைந்துள்ளது. இங்கு இந்தியர்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். இந்தக் குடியிருப்பின் நான்காவது மாடியில் இயங்கி வந்த சூப்பர் மார்க்கெட் ஒன்றில் சனிக்கிழமையன்று திடீரென தீப்பிடித்தது.


அடுக்குமாடி குடியிருப்பு முழுவதும் பரவிய தீ பலரை பலிவாங்கியது. துபாய் டெய்பா புர்ஜ் முரார் (Deira Burj Murar) பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் உயிரிழந்த 2 தமிழர்kஅளின் குடும்பங்களுக்கு தலா ரூ10 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படும் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 



துபாய் தீ விபத்தில் இறந்தவர்களின் உடல்களை விரைவாக தமிழ்நாடு கொண்டுவருவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 


மேலும் படிக்க | சூடானில் ராணுவம் - துணை ராணுவம் இடையில் மூண்ட போர்! 25 பேர் பலி!


இந்த தீ விபத்தில் சிக்கியவர்களில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த இருவரைத் தவிர, கேரளாவை சேர்ந்த மலப்புரம் ரிஜேஷ், அவரது மனைவி ஜிஷி ஆகியோரும் இந்த தீ விபத்தில் உயிரிழந்துள்ளனர். 


துபாயின் பழமையான பகுதிகளில் ஒன்றான அல்-ராஸ் சுற்றுப்புறத்தில் உள்ள ஐந்து மாடி கட்டிடம் மற்றும் பல புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் வசிக்கும் இடம் ஆகும். சனிக்கிழமை பிற்பகல் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக அபுதாபியில் இருந்து வெளிவரும் செய்தித்தாள் தி நேஷனல் செய்தி வெளியிட்டுள்ளது. 


கட்டிடப் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புத் தேவைகள் சரிவர பூர்த்தி செய்யப்படாததே தீ விபத்துக்குக் காரணம் என முதற்கட்ட விசாரணைகள் காட்டுவதாக, சிவில் பாதுகாப்பு அறிக்கையை மேற்கோள் காட்டி தி நேஷனல் செய்தித்தாள் செய்தி  வெளியிட்டுள்ளது. 


மேலும் படிக்க | சருமத்தின் கீழ் நெளிந்த புழுக்களை கண்டு அதிர்ந்த பெண்! பச்சை ரத்த உணவினால் வந்த பாதிப்பு!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ