சிறந்த உலகளாவிய பல்கலைக்கழகங்களில் சேர உலக அளவில் கடும் போட்டி நிலவுவதுண்டு. பல்வேறு உலக நாடுகளின் மாணவர்கள் இந்த முதன்மை பல்கலைக்கழகங்களில் சேர பல வித முயற்சிகளை எடுக்கிறார்கள். இந்த பல்கலைக்கழகங்கள் மிகவும் போட்டித்தன்மை வாய்ந்த சேர்க்கை விகிதங்களைக் கொண்டுள்ளன என்பது அனைவரும் அறிந்ததே. இந்த செயல்முறைக்கு நீங்கள் தயாராக இல்லை என்றால், இந்த பல்கலைக்கழகங்களில் இடம் பிடிப்பது மிகவும் கடினமாகிவிடும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உங்கள் மதிப்பெண்களும் கிரேடுகளும் எவ்வளவு நன்றாக இருந்தாலும், இந்த பல்கலைக்கழகங்களில் சேர மதிப்பெண்களையும் தாண்டி பல விஷயங்களில் கவனம் செலுத்துவது அவசியமாகும். பல சர்வதேச மாணவர்கள் வெளிநாட்டில் படிப்பதற்கு விண்ணப்பிக்கும் போது பல முக்கிய விஷயங்களை மறந்துவிடுவது பொதுவாக நடக்கும் ஒரு விஷயமாக உள்ளது. 


வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் நீங்கள் விண்ணப்பங்களை நிரப்பத் தொடங்கும் முன், மனதில் கொள்ள வேண்டிய சில முக்கிய விஷயங்களை பற்றி இந்த பதிவில் காணலாம். எந்தவொரு சிறந்த உலகளாவிய பல்கலைக்கழகத்திலும் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்க உதவும் ஐந்து உள் உதவிக்குறிப்புகளுடன் கூடிய ஒரு வழிகாட்டியை இந்த பதிவில் பார்ப்போம். 


மேலும் படிக்க | NRI Rights: வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வாக்குரிமை கேட்டு கையெழுத்து இயக்கம்


சரியான நேரத்தில் செயல்முறையை தொடங்குங்கள்


எந்தவொரு வெற்றிகரமான விண்ணப்பத்துக்கும் முக்கியமானது அதற்கான முன்னேற்பாடு ஆகும். அதாவது, நீங்கள் ஆர்வமாக உள்ள படிப்புகள் மற்றும் பல்கலைக்கழகங்களை ஆய்வு செய்ய நிறைய நேரம் ஒதுக்க வேண்டும். அனைத்து தகவல்களையும் பெற ஒரு பல்கலைக்கழகத்தின் இணையதளத்தைப் பார்ப்பதைத் தாண்டி இன்னும் பல செயல்களை செய்வது முக்கியம்.


நஜா எஜுகேஷன் எக்ஸ்போ போன்ற உலகளாவிய கல்வி கண்காட்சியில் கலந்துகொள்வது இதற்கான சிறந்த வழிகளில் ஒன்றாக இருக்கும். இந்த ஆண்டு, நஜா அபுதாபி மற்றும் நஜா துபாய் ஆகிய கண்காட்சிகளில் 20 நாடுகளைச் சேர்ந்த 80 க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் பங்குகொள்கின்றன. 


நஜா எக்ஸ்போ பல ஆண்டுகளாக மத்திய கிழக்கில் முன்னணி சர்வதேச உயர்கல்வி கண்காட்சியாக இருந்து வருகிறது. இது மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு இடையே ஒரு பாலமாக செயல்படுகின்றது. மாணவர்கள் தங்கள் கனவுப் பள்ளிகளைப் பற்றிய முதல்-நிலைத் தகவலைப் பெறுவதற்கு இந்த கண்காட்சி ஒரு சிறந்த தளமாக உதவுகின்றது. 


பல மாணவர்கள் தங்கள் பள்ளி இறுதியாண்டில்தான் பல்கலைக்கழக விண்ணப்பங்களைத் தொடங்குகிறார்கள். இது தவறு என்கிறார்கள் கல்வித்துறை வல்லுனர்கள். 


10 மற்றும் 11 ஆம் வகுப்புகளில் படிக்கும் நேரம்தான் மாணவர்கள் கல்லூரிகளை பற்றி ஆராய்ந்து முடிவெடுக்க சிறந்த சமயம் ஆகும். பல்கலைக்கழகங்களில் தாங்கள் படிக்க விரும்பும் பாடப்படிப்பு என்ன, தங்களுக்கு எங்கு படிக்க விருப்பம், தாங்கள் விரும்பும் பாடம் எங்கு உள்ளது, எந்த கல்லூரி தங்களுக்கு ஏற்றதாக இருக்கும் என அவர்கள் இந்த வகுப்புகளில் இருக்கும்போதே ஆராய்ந்து தெளிவுபடுத்துக்கொள்ள வேண்டும். 


கல்வி கண்காட்சிகளில் கலந்துகொள்வதற்கும் இது ஒரு நல்ல நேரமாக இருக்கும். இந்த கண்காட்சிகள் மாணவர்கள் பல வித விருப்பங்களை ஆராய வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கின்றன. பல நாடுகளில் உள்ள பல்கலைக்கழகக்கள் பற்றி மாணவர்கள் இந்த கண்காட்சிகளில் தெரிந்துகொள்ளலாம். பல்வேறு பல்கலைக்கழகங்கள் வழங்கும் பாடப்பிரிவுகள், வசதிகள், ஆய்வுகள், விடுதிகள் பற்றிய முழுமையான தகவல்களை பெறவும் இந்த கண்காட்சிகள் இவர்களுக்கு உதவுகின்றன. 


மேலும் படிக்க | ரூபாய் மதிப்பில் வீழ்ச்சி... விசா பெறுவதில் தாமதம்... தவிப்பில் இந்திய மாணவர்கள்! 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ