தமிழகத்திலிருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பல பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இவற்றில் மசாலா பொருட்கள், ஆபரணங்கள், பம்பு செட்டுகள், முத்துக்கள் ஆகியவை அடங்கும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில், இந்தியாவிற்கும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் இடையேயான விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தம் குறித்து, தொழில் துறையினருடன் ஆலோசனை செய்த அமைச்சர் அன்பரசன், தமிழகத்தில் ஏற்றுமதியை வரும் 2030ம் ஆண்டிற்குள் 100 பில்லியன் அமெரிக்க டாலர் என்ற அளவில் உயர்த்த அனைத்து விதமான உதவிகளும் வழங்கப்படும் என்று உறுதி அளித்தார். 


அமைச்சர் அன்பரசன் மாநிலத்தின் குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை அமைச்சர் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | தமிழ் இனத்தையே அழித்த ராஜபக்சேவுக்கு கிடைத்த மிகப்பெரிய தண்டனை: விஜயகாந்த் அறிக்கை 


இது குறித்து மேலும் கூறிய அமைச்சர் அன்பரசன், கடந்த நிதியாண்டில் அதாவது 2021-22ம் ஆண்டில் சுமார் 11,000 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள், தமிழகத்தில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.


முன்னதாக, இந்தியாவின் சர்வதேச வர்த்தகத்தில் 3வது இடத்தில் உள்ள தமிழகம்,  முதலாவது இடத்தை பிடிக்க வேண்டும் எனபதே எனது லட்சியம் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.


சென்னையில் நடைபெற்ற தென் பிராந்திய ஏற்றுமதியாளர் விருது விழாவில் கலந்துகொண்டு ஆற்றிய தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின், 6வது மற்றும் 7வது தென் பிராந்திய சிறந்த ஏற்றுமதியாளர் விருது வழங்கும் விழா, தமிழக  தலைநகர் சென்னையில் நடப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது என்றார்.


மேலும், தமிழகம் வந்திருக்கக்கூடிய அனைவரையும் தமிழகத்தின் முதல்வர் என்ற முறையில் அனைவரையும் வரவேற்க கடமைப்பட்டிருக்கிறேன் எனவும் அவர் தெரிவித்தார்.


மேலும் படிக்க | இலங்கைத் தமிழர்களை மத்திய மாநில அரசுகள் காத்திட வேண்டும்: டிடிவி தினகரன் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR