இலங்கையில் நாளுக்கு நாள் நிலைமை மோசமடைந்து வருகிறது. ஏற்கனவே விலைவாசி உயர்வால் தவித்து வரும் மக்கள் தற்போது வன்முறையின் வெறியாட்டத்தை அனுபவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில், இலங்கையில் சிக்கித் தவிக்கும் தமிழர்களைக் காப்பாற்றி பாதுகாக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் உதவ வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
இந்த அறிக்கையில், “இலங்கை-யில் நாளுக்கு நாள் நிலைமை மோசமடைந்து வரும் சூழலில், நம்முடைய தொப்புள் கொடி உறவுகளான அங்குள்ள தமிழர்களின் நலன் காப்பதில் மத்திய, மாநில அரசுகள் கூடுதல் அக்கறையோடு செயல்பட வேண்டும்.
இலங்கையில் நாளுக்கு நாள் நிலைமை மோசமடைந்து வரும் சூழலில், நம்முடைய தொப்புள் கொடி உறவுகளான அங்குள்ள தமிழர்களின் நலன் காப்பதில் மத்திய, மாநில அரசுகள் கூடுதல் அக்கறையோடு செயல்பட வேண்டும்.(1/3)@CMOTamilnadu
— TTV Dhinakaran (@TTVDhinakaran) May 10, 2022
'இது வெளிநாட்டு விவகாரம்' என்று தட்டிக்கழித்துவிட நினைக்காமல், உறுதியான முடிவுகளை எடுத்து ஆட்சியாளர்கள் செயல்பட வேண்டும். மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் கொடுத்து, இலங்கைத் தமிழர்களைக் காத்திட தேவையான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்திட வேண்டும். (2/3)
— TTV Dhinakaran (@TTVDhinakaran) May 10, 2022
இது வெளிநாட்டு விவகாரம்' என்று தட்டிக்கழித்துவிட நினைக்காமல், உறுதியான முடிவுகளை எடுத்து ஆட்சியாளர்கள் செயல்பட வேண்டும். மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் கொடுத்து, இலங்கைத் தமிழர்களைக் காத்திட தேவையான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்திட வேண்டும்.
மேலும் படிக்க | மகிந்த ராஜபக்ச இங்குதான் உள்ளார், நலமாக உள்ளார்: இலங்கை பாதுகாப்பு செயலாளர்
துன்பத்தில் இருக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு இப்போதாவது உதவுவதன்மூலம், காங்கிரசோடு கூட்டுச் சேர்ந்து இலட்சக்கணக்கான தமிழர்களைக் கொன்றழித்த பாவத்திற்கு தி.மு.க சிறிதாவது பரிகாரம் தேடிக்கொள்ளலாம்.” என அவர்தெரிவித்துள்ளார்.
துன்பத்தில் இருக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு இப்போதாவது உதவுவதன்மூலம், காங்கிரசோடு கூட்டுச் சேர்ந்து இலட்சக்கணக்கான தமிழர்களைக் கொன்றழித்த பாவத்திற்கு தி.மு.க சிறிதாவது பரிகாரம் தேடிக்கொள்ளலாம்.(3/3)
— TTV Dhinakaran (@TTVDhinakaran) May 10, 2022
இதற்கிடையில், இலங்கையில் நாளுக்கு நாள் நிலைமை மோசமடைந்து வருகிறது. ராஜபக்ச-வின் பரம்பரை வீடு எரிக்கப்பட்டது. அமைச்சர்களின் வீடுகள் சேதப்படுத்தப்பட்டன. தங்காலையில் ராஜபக்ச சகோதரர்களின் தந்தையான டி.ஏ.ராஜபக்ஷவின் உருவபொம்மை சிலரால் உடைக்கப்பட்ட நிலையில், அம்பாந்தோட்டாவில் ராஜபக்சவின் பாரம்பரிய வீடு ஒன்று தீக்கிரையாக்கப்பட்டது. இலங்கை அதிகாரிகளால் பகிரப்பட்ட சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, மோதல்களில் இதுவரை குறைந்தது எட்டு பேர் இறந்துள்ளனர், 220 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இலங்கையில் இன்று வன்முறை சம்பவங்கள் நடைபெறாமல் இருந்தால் நாளை ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் என இலங்கை பாதுகாப்பு செயலாளர் கூறியுள்ளார்.
மேலும் படிக்க | இலங்கையிலிருந்து தப்பித்த சிறை கைதிகள் - தமிழகத்திற்கு உளவுத்துறை எச்சரிக்கை..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR