திருச்சி: தமிழகத்தின் திருச்சி விமான நிலையத்தில் துபாயில் இருந்து வந்த மூன்று பயணிகளின் லேப்டாப்பில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 1.3 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மூன்று பயணிகளிடம் இருந்து மொத்தம் 1.98 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மடிக்கணினியின் கீ போர்டின் கீழ் உள்ள குழிக்குள் தங்கம் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக காவலுறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இந்த மாதம் (மே மாத,) 11 ஆம் தேதி ஷார்ஜா வழியாக இந்தியா வந்த மூன்று பயணிகளும் சுங்கத் துறையினரால் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் தற்போது மேல்கட்ட விசாரணைகள் நடந்துவருகின்றன. 


சமீப காலங்களில் வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்தப்படும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. கடத்தல்கார்ரகள் பல நூதன வழிகளில் தங்கத்தை கடத்த திட்டமிடுகிறார்கள். எனினும், இந்த அனைத்து வழிகளையும் சுங்கதுறையும், காவல் துறையினரும் கண்டறிந்துவிடுகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | "அயன் சூர்யாவை" மிஞ்சிய புத்திசாளி! வைரலான வீடியோ 


ஷூக்களுக்குள், பல் செட்டில், உடலுக்குள் தங்கத்தை தைத்து என பல பழிகளில் தங்கம் கடத்தப்பட்டு வருகிறது. இவற்றில் பல வழிகள் மிகவும் ஆபத்தானவை என்பதும் குறிப்பிடத்தக்கது.


துபாய், சிங்கப்பூர் ஆகிய நாடுகள் பாதுகாப்பு மற்றும் கடத்தல் எதிர்ப்பு நடவடிக்கைகளில் மிகவும் கண்டிப்பான செயல்முறைகளை கொண்டுள்ளன. எனினும், அந்த நாடுகளிலிருந்தும் அவ்வப்போது இது போன்ற நூதன முறைகளில் தங்கம் கடத்தப்படுவது ஆச்சரியத்தை அளிக்கின்றது. 


எனினும், ஏமாற்றுபவர்கள் எவ்வளவு சாமர்த்தியமாக செயல்பட்டாலும், இதற்காக நியமிக்கப்பட்டிருக்கும் அதிகாரிகளும், தமிழக சுங்கத் துறையும், மோசடிக்காரர்களின் அனைத்து தந்திரங்களையும் தவிடுபொடி ஆக்குகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 


துபாயில் இருந்து மடிக்கணினியின் கீபோர்டில் மறைத்து கடத்தி வரப்பட்ட தங்கத்தை திருச்சி சுங்கத்துறை அதிகாரிகள் கண்டெடுத்த காட்சிகளை திருச்சி சுங்கத்துறை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.  



மேலும் படிக்க | துபாயிலிருந்து தங்க கட்டிகளை கடத்தி வந்த இளைஞர்- லாட்ஜில் அடைத்து வைத்து கொடுமை..! 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR