தமிழகம் முழுவதும் கொரோனா காலகட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியவர்கள், தவறான செய்தியை பரப்பியவர்கள், காவல்துறையினரை பணி செய்யவிடாமல் தடுத்தவர்கள் மற்றும் இ-பாஸை முறைகேடாக பெறுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் 10 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன.
இந்நிலையில் பொதுமக்களின் நலன் கருதி அந்த வழக்குகள் கைவிடப்படும் என, கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தின்போது முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்திருந்தார்.அதனை தொடர்ந்து அரசாணையும் வெளியிடப்பட்டது.
மேலும் படிக்க | சாராயக்கடையை ஏலத்தில் எடுத்த பெண்!
இந்நிலையில் இது குறித்து தமிழக டிஜிபி சைலேந்திரபாபு, சென்னை தவிர அனைத்து மாவட்ட காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.அதில், ஊரடங்கு உத்தரவுகளை மீறியதற்காக போடப்பட்ட வழக்குகளில், முறைகேடாக இ பாஸ் பெறுதல், காவல்துறையினரை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட வழக்குகளை தவிர போடப்பட்ட மற்ற வழக்குகளை திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதன் அடிப்படையில்,கொரோனா ஊரடங்கு காலத்தில் விதிமுறைகளை மீறியவர்கள்,தவறான செய்தியை பரப்பியவர்கள் என பதிவு செய்யப்பட்ட சுமார் 8 லட்சத்து 98 ஆயிரத்து 948 வழக்குகள் பொதுமக்களின் நலன் கருதி கைவிடப்படுவதாக டிஜிபி சைலேந்திரபாபு தெறிவித்துள்ளார்.அதன் அடிப்படையில் சுமார் 15 லட்சம் பேர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் அனைத்தும் கைவிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | நடத்துனரை ரோட்டில் வைத்து அடித்த போலீஸ் : தட்டிக் கேட்ட பொதுமக்கள் - வீடியோ
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYe