இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உழைப்பாளர் தின கூட்டம் நுவரெலியா – கொட்டகலையில் இன்று இடம்பெற்றது. இந்த உழைப்பாளர் தின கூட்டத்தில் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை முக்கிய விருந்தினராக கலந்து கொண்டார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளரும், நாடாளுமன்ற எம்.பியுமான ஜீவன் தொண்டமான் மற்றும் தலைவர் செந்தில் தொண்டமான்,  நாடாளுமன்ற உறுப்பினர் ராமேஷ்வரன், கட்சியின் முக்கியஸ்தர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர். இந்த மே தின கூட்டத்திற்கு ஏராளமான இந்திய வம்சாவளி தமிழர்கள் கலந்து கொண்டனர். 


நிகழ்வில் கலந்து கொண்ட தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலைக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸினால் அமோக வரவேற்பு அளிக்கப்பட்டதோடு, அவருக்கு நினைவுச்சின்னம் ஒன்றும் வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலை, கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்றமை குறிப்பிடதக்கது.


தொடர்ந்து பேசிய அண்ணாமலை, பாரத  பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியின் கீழ் முழு உலகமும் இந்தியாவை திரும்பி பார்க்கின்றது. இந்தியா என்பது வல்லரசு நாடாக மாறியுள்ளது. உலகில் 5வது மிகப்பெரிய பொருளாதார பலமுடைய நாடாக மாறியுள்ளது.  ரஷ்யா, உக்ரைனுக்கிடையில் மோதல் ஏற்பட்டபோதுகூட, உக்ரைனில் வாழ்ந்த இந்தியர்களை சிறு காயமின்றி மீட்டெடுத்தார். 


இலங்கையை அருகிலுள்ள நாடு, எமது சொந்தங்கள் வாழும் நாடு என இரு கோணத்தில் இந்தியா பார்க்கின்றது. அதனால் தான் நெருக்கடியான கட்டங்களில் உதவிகள் வழங்கப்படுகின்றன. உயிர் காப்பு மருந்து தேவை என்று சொன்னபோது, 107 வகையான 760 கிலோ மருந்துகளை அனுப்பி வைத்துள்ளோம்.  எதிர்காலத்திலும் உதவுவோம். மலையக மக்களுக்கான உதவிகளும் தொடரும். நாம் வளரும் அதே வேளை, எமது தொப்புள்கொடி உறவுகளையும் வளர வைப்போம். மலையகம் கல்வியால் உயர வேண்டும். அதற்கான உதவிகளும் தொடரும். 


மேலும் படிக்க | இலங்கை விவகாரம்: முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதிய அண்ணாமலை


இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி  நிலை, நீண்ட காலத்துக்கானது அல்ல. விரைவில் நிலைமை மாற வேண்டும் என இறைவனை  பிரார்த்திக்கின்றேன். இலங்கையை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்டெடுப்பதற்கு இந்தியாவும் போராடிக்கொண்டிருக்கின்றது. அன்று அனுமான் எப்படி சஞ்சீவ மலையை சுமந்தாரோ, அது போலவே இலங்கையின் பொருளாதார நெருக்கடியை சுமப்பதற்கு பாரத பிரதமர் நரேந்திர மோடியும் தயாராகவே இருக்கின்றார்.” - என்றார்.


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR