ஆஸ்திரேலியாவில் படிக்கும் இந்திய மாணவர் மீது தாக்குதல்: பல இடங்களில் கத்திக்குத்து
Indian Student Stabbed: ஆஸ்திரேலியாவின் சிட்னியில் ஆக்ராவை சேர்ந்த இந்திய மாணவர் பலமுறை கத்தியால் குத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்திரேலியாவின் சிட்னியில் ஆக்ராவை சேர்ந்த இந்திய மாணவர் பலமுறை கத்தியால் குத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாக்கப்பட்ட 28 வயது இந்திய மாணவருக்கு ஆஸ்திரேலியாவில் உள்ள இந்தியத் தூதரகம், தூதரக உதவியை வழங்கியுள்ளது. உள்ளூர் மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவர் "தீவிரமான ஆனால் நிலையான" நிலையில் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
"சிட்னியில் உள்ள இந்திய தூதரகம் மாணவருக்கு தூதரக உதவியை வழங்கியுள்ளது," என்று புதுதில்லியில் உள்ள ஆஸ்திரேலிய உயர் கமிஷன் கூறியுள்ளது. ஷுபம் கர்க் என அடையாளம் காணப்பட்ட அந்த மாணவரின் ஒரு குடும்ப உறுப்பினர் அவரை காண ஆஸ்திரேலியா செல்வதற்கான விசா ஏற்பாடுகளுக்கான உதவிகளும் செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்எஸ்டபிள்யூ பல்கலைக்கழகத்தில் இயந்திரவியல் பொறியியலில் முனைவர் பட்டப்படிப்பில் படித்து வரும் அந்த மாணவர், சிட்னியின் ஆர்டமோனில் 27 வயதான டேனியல் நோர்வூட் என்பவரால் பலமுறை கத்தியால் குத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவத்தை தொடர்ந்து நோர்வூட் கைது செய்யப்பட்டதாக உள்ளூர் ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
டேனியல் நோர்வூட் கைது செய்யப்பட்டு சாட்ஸ்வூட் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவர் மீது கொலை முயற்சிக்கான குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகமான தி ஆஸ்திரேலியா டுடே தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க | ஐக்கிய அரபு அமீரகத்தில் பணிபுரிபவரா நீங்கள்? உங்களுக்கு ஒரு சூப்பர் செய்தி!!
அக்டோபர் 6 ஆம் தேதி இரவு 10.30 மணியளவில் கார்க் தனது வசிப்பிடத்திற்குத் திரும்பும் வழியில் பசிபிக் நெடுஞ்சாலையில் நடந்து கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்ததாக உள்ளூர் ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இந்திய மாணவருக்கு முகம், மார்பு மற்றும் வயிற்றில் பல இடங்களில் கத்திக் குத்து காயங்கள் உள்ளன. அருகில் வசித்த ஒருவர் அடிபட்ட மாணவரை ராயல் நார்த் ஷோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஊடக அறிக்கையின்படி, கார்க் "தீவிரமான ஆனால் நிலையான நிலையில்" இருக்கிறார்.
இச்சம்பவத்தை தொடர்ந்து, வடக்கு கடற்கரை போலீஸ் ஏரியா கமாண்ட் துப்பறிவாளர்கள், சம்பவம் குறித்து விசாரணை நடத்த ஸ்டிரைக் ஃபோர்ஸ் புரோசியை அமைத்தனர். பின்னர், அக்டோபர் 9 ஆம் தேதி பிற்பகல் 3.40 மணியளவில் கிரீன்விச்சில் பசிபிக் நெடுஞ்சாலையில் உள்ள ஒரு வீட்டில் தேடுதல் உத்தரவின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
சந்தேகநபர் நோர்வூட் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், அவர் வீட்டில் இருந்து பல பொருட்களை கைப்பற்றியுள்ளனர். பொருட்கள் தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன.
ஹார்ன்ஸ்பை உள்ளூர் நீதிமன்றத்தில் நோர்வூட் ஆஜரானார். எனினும், அவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது. டிசம்பர் 14, 2022 அன்று அடுத்த நீதிமன்றத்தில் ஆஜராக அவர் தொடர்ந்து காவலில் இருக்கிறார்.
தகவல்களின்படி, நோர்வூட் சுபம் என்ற இந்திய மாணவரிடம் பணத்தையும் தொலைபேசியையும் தரும் படி மிரட்டியதாக கூறப்படுகிறது. சுபம் மறுத்ததால், அவர் வயிற்றில் பலமுறை கத்தியால் குத்தப்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் தாக்குதல் நடத்திய நபர் குற்றம் நடந்த இடத்தில் இருந்து தப்பிச் சென்றதாக தி ஆஸ்திரேலியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.
நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் துறையில் முனைவர் பட்டம் பெறுவதற்காக ஷுபம் கார்க் இந்த ஆண்டு செப்டம்பரில் ஆஸ்திரேலியா சென்றார். அவர் ஐஐடி மெட்ராஸில் முதுகலைப் பட்டப்படிப்பை முடித்திருந்தார்.
மேலும் படிக்க | சர்ச்சை ஏற்படுத்திய அழகுப்போட்டி விளம்பரம்! ‘இந்த’ சாதி மட்டும் தான் கலந்துக்கலாம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ