ஐக்கிய அரபு அமீரகத்தில் பணிபுரிபவரா நீங்கள்? உங்களுக்கு ஒரு சூப்பர் செய்தி!!

UAE Jobs: தங்களது பணியாளர்களுக்கு வழக்கமான வருடாந்தர சம்பள உயர்வை விட அதிக உயர்வை வழங்க ஐக்கிய அமீரக நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Oct 13, 2022, 02:25 PM IST
  • ஐக்கிய அரபு அமீர்கத்தின் பொருளாதாரம் இந்த ஆண்டு முதல் காலாண்டில் 8.2 சதவிகிதம் வளர்ச்சியடைந்தது.
  • இது 11 ஆண்டுகளில் மிக விரைவான வேகமாகும்.
  • இது தனியார் துறையை உயர்த்தியது, பல்வேறு துறைகளில் அதிக வேலைகளை உருவாக்கியது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் பணிபுரிபவரா நீங்கள்? உங்களுக்கு ஒரு சூப்பர் செய்தி!! title=

அமீரகத்தில் பணிபுரிபவர்களுக்கு நல்ல செய்தி!! தங்களது பணியாளர்களுக்கு வழக்கமான வருடாந்தர சம்பள உயர்வை விட அதிக உயர்வை வழங்க ஐக்கிய அமீரக நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. இறுக்கமான தொழிலாளர் சந்தை மற்றும் பிராந்திய நாடுகளில் நிலவும் திறமைக்கான போட்டி காரணமாக அமீரக நிறுவனங்கள் இந்த முடிவை எடுக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பல நிறுவனங்களில் 2022 ஆம் ஆண்டிற்கு முதலாளிகள் திட்டமிட்டதை விட நிறுவனத்தின் பணியாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இது ஐக்கிய அரபு அமீரகத்தில் பொருளாதாரத்தின் சாதகமான நிலையைக் காட்டும் வகையில் உள்ளது. 

தற்போது இருக்கும் தொழிலாளர் சந்தை இறுக்கமாக உள்ளது. திறமை வாய்ந்த பணியாளர்களை எத்தனை சம்பளம் கொடுத்தாவது தங்கள் நிறுவனங்களில் சேர்க்கவும், ஏற்கனவே இருப்பவர்களை தக்க வைத்துக்கொள்ளவும் நிறுவனங்கள் தயாராக உள்ளன. அமீரக நிறுவனங்கள், உள் நாட்டில் மட்டுமல்லாமல், பிராந்தியத்திலும் இந்த போட்டியை எதிர்கொண்டு வரும் நிலையில், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தொழிலாளர்களுக்கு வேண்டியவற்றை செய்ய முனைப்பு காட்டி வருகின்றன. 

ஐக்கிய அரபு அமீர்கத்தின் பொருளாதாரம் இந்த ஆண்டு முதல் காலாண்டில் 8.2 சதவிகிதம் வளர்ச்சியடைந்தது. இது 11 ஆண்டுகளில் மிக விரைவான வேகமாகும். இது தனியார் துறையை உயர்த்தியது, பல்வேறு துறைகளில் அதிக வேலைகளை உருவாக்கியது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் பணவீக்கம் அதிகரித்து வருவதால், இழப்பீட்டுத் தொகுப்புகளை சரிசெய்வதற்கான அழுத்தத்தை அமீரக நிறுவனங்கள் உணர்கின்றன. ஐக்கிய அரபு அமீரகத்தில் அதிகரித்து வரும் பணவீக்கத்தை ஈடுசெய்வதற்கான இழப்பீடுகள் மற்றும் கொடுப்பனவுகள் தொடர்பாக சுமார் 67 சதவீத வணிகங்கள் ஊழியர்களிடமிருந்து கோரிக்கைகளைப் பெற்றுள்ளன.

மேலும் படிக்க | இந்தியாவில் நகைக் கடன் வாங்கியவர்கள் சவுதி அரேபியாவில் தவணை செலுத்தலாம் 

2023 ஆம் ஆண்டில், வழக்கமான தகுதி சார்ந்த வருடாந்திர ஊதிய அதிகரிப்பை விட பணியாளர்களுக்கு அதிகமாக வழங்க நிறுவனங்கள் திட்டமிடுகின்றன என்று சந்தை நிபுணர்கள் கூறுகிறார்கள். அடுத்த ஆண்டு வருடாந்தர சம்பள உயர்வை ஐந்து சதவிகிதமாக நிர்ணயிக்க நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. இது சமீபத்திய ஆண்டுகளில் காணப்பட்ட மூன்று முதல் நான்கு சதவீதத்தை விட அதிகமாகும். 

உக்ரைன்-ரஷ்யா இராணுவ நெருக்கடிக்குப் பிறகு எரிபொருள் விலை உயர்வு ஏற்பட்டது. மேலும் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரித்ததன். இதன் விளைவாக ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் உலகெங்கிலும் பணவீக்கம் அதிகரித்துள்ளது.

கோல்டன் விசா மற்றும் அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட பிற தொழிலாளர் ஒப்பந்த முயற்சிகள் முதலாளி-பணியாளர் உறவை மேலும் வலுப்படுத்தும் என்றும் "முதலாளியை தேர்வு செய்யும் தொழிலாளர்" என்ற ஐக்கிய அரபு அமீரகத்தின் நிலையை பலப்படுத்தும் என்றும் மனித வளங்கள் மற்றும் ஆட்சேர்ப்பு ஆலோசகர்கள் கூறுகின்றனர். 

மக்களுக்குக் கிடைக்கும் பல்வேறு விசாக்களுடன் சமீபத்திய மாற்றங்கள் மற்றும் தொழிலாளர் ஒப்பந்த விதிகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் ஆகியவை உள்ளூர் சந்தையில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் இது சந்தையை மிகவும் கவர்ச்சிகரமான மற்றும் போட்டித்தன்மை கொண்ட தளமாக மாற்றும் என்றும் நிபுணர்கள் கருதுகிறார்கள். 

மேலும் படிக்க | NRI News: இந்தியாவிற்கு எவ்வளவு தங்கத்தை சட்டப்பூர்வமாக எடுத்து வரலாம்? 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News