வெளிநாட்டில் படிக்க விரும்பும் மாணவர்களின் விருப்பமான இடமாக ஆஸ்திரேலியா மாறி வரும் நிலையில், அங்கு வசிப்பதற்கான செலவு மற்றும் ஆஸ்திரேலியாவின் பல்வேறு பகுதிகளில் படிக்க ஆகும் செலவு ஆகியவற்றை பற்றி அறிந்து கொள்ளலாம். ஆஸ்திரேலியாவில் உள்ள கல்லூரிகள் தற்போது, உலகின் முதல் 100 கல்வி நிறுவனங்களில் இடம் பெற்றுள்ளன. அங்கு படிக்க விரும்பும் மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்க இதுவே காரணம். மறுபுறம், அங்கு வசிப்பதற்காக ஆகும் செலவு ஒப்பிட்டளவில் குறைவாக உள்ளது, வாழ்க்கைத் தரம், பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் மற்றும் வெளிநாட்டு மாணவர்களுக்கான சமீபத்தில் தளர்த்தப்பட்ட பணி அனுமதி விதிகள், ஆகியவை காரணமாக ஆஸ்திரேலியா மிகவும் விரும்பும் நாடாக மாறியுள்ளது.
கோவிட் தொற்று நோய்க்குப் பிறகு பணவீக்க விகிதம் கணிசமாக உயர்ந்துள்ள நிலையில், சமீபத்திய ஆண்டுகளில் வசிப்பதற்கான செலவு எல்லா நாடுகளிலும் அதிகரித்துள்ளது என்ற உண்மையை நாம் மனதில் கொள்ள வேண்டும். ஜூன் 2021-2022 க்கு இடையில் ஆஸ்திரேலியாவில் மொத்த பணவீக்கம் 6.1% அதிகரித்துள்ளது. இது கல்விச் செலவுகளை நேரடியாகப் பாதிக்கவில்லை என்றாலும், வாடகை மற்றும் இதர அன்றாடச் செலவுகள் மிகக் குறைவாகவே பாதிக்கப்பட்டுள்ளன.
வெளிநாட்டில் இருந்து வந்து படிக்க விரும்புபவர்களுக்கு, அங்கு வசிப்பதற்கான செலவு மற்றும் குறைந்தபட்ச தரமான பராமரிப்பை உறுதி செய்வது மிகவும் முக்கியம். ஆஸ்திரேலியாவில் படிக்க விரும்புபவர்கள் செலுத்த வேண்டிய சில செலவுகள் பற்றிய தகவல்கள் கீழே உள்ளன. இருப்பினும், நீங்கள் தேர்ந்தெடுக்கும் பிராந்தியம் மற்றும் நிறுவனத்தைப் பொறுத்து இந்த செலவுகள் மாறுபடும்.
தங்குமிட செலவுகள்
1. தங்கும் விடுதிகள் மற்றும் விருந்தினர் இல்லங்கள் - வாரத்திற்கு $90 முதல் $150 வரை
2. பகிர்ந்து கொள்ளும் வாடகை - வாரத்திற்கு $95 முதல் $215 வரை
3. கல்லூரி வளாகச் செலவுகள் - வாரத்திற்கு $110 முதல் $280 வரை
4. ஹோம்ஸ்டே - வாரத்திற்கு $235 முதல் $325 வரை
5. வாடகை - வாரத்திற்கு $185 முதல் $440 வரை
6. உறைவிடப் பள்ளிகள் - வருடத்திற்கு $11,000 முதல் $22,000 வரை
மேலும் படிக்க | NRI News: கனடா நாட்டின் திறமைக்கான ஆதாரமாக மாறி வரும் இந்தியா!
பிற செலவுகள்
1. மளிகை சாமான்கள் மற்றும் வெளியே சாப்பிடுவதற்கு - வாரத்திற்கு $140 முதல் $280 வரை
2. எரிவாயு, மின்சாரம் - வாரத்திற்கு $10 முதல் $20 வரை
3. தொலைபேசி மற்றும் இணையம் - வாரத்திற்கு $15 முதல் $30 வரை
4. பொது போக்குவரத்து - வாரத்திற்கு $30 முதல் $60 வரை
5. காரில் பயனம் செய்தால் - வாரத்திற்கு $150 முதல் $260 வரை
6. பொழுதுபோக்கு - வாரத்திற்கு $80 முதல் $150 வரை
மேலும் படிக்க | இந்திய மாணவர்களுக்கு விரைவில் முன்னுரிமை விசா: இங்கிலாந்து தூதரகம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ