வெளிநாடுவாழ் இந்தியர்கள் இந்தியாவில் PPF கணக்கு தொடங்க முடியுமா? விதிகள் என்ன?
NRI PPF Account: வெளிநாடுவாழ் இந்தியர்கள், இந்தியாவில் முதலீடுகளை செய்யலாம் என்றாலும், அவர்கள் பிபிஎஃப் கணக்கு தொடங்க முடியுமா? முடியும் ஆனால் முடியாது! விளக்கத்தை தெரிந்துக் கொள்ளுங்கள்
நியூடெல்லி: வெளிநாடுவாழ் இந்தியர்கள், இந்தியாவில் முதலீடுகளை செய்யலாம் என்றாலும், அவர்கள் பிபிஎஃப் கணக்கு தொடங்க முடியுமா என்ற சந்தேகம் பலருக்கு தொடர்ந்து இருந்துக் கொண்டே இருக்கிறது. என்.ஆர்.ஐ.க்கள், குடியுரிமை பெற்ற இந்தியர்களாக இருந்தபோது அவர்கள் தொடங்கிய பிபிஎஃப் கணக்கில் முதலீடு செய்யலாம். ஆனால், வெளிநாடு வாழ் இந்தியர் அந்தஸ்தைப் பெற்ற பிறகு அவர்களால் புதிய PPF கணக்கைத் திறக்க முடியாது. என்.ஆர்.ஐக்களுக்கு எழும் பிபிஎஃப் தொடர்பான சந்தேகங்களையும், அதற்கான விளக்கங்களையும் தெரிந்துக் கொள்ளுங்கள்.
ஏற்கனவே இருக்கும் பிபிஎஃப் கணக்கில் என்.ஆர்.ஐக்கள் முதலீடு செய்யலாம், அதாவது, நீங்கள் குடியுரிமை இந்தியராக இருந்தபோது தொடங்கப்பட்ட கணக்கில் பணம் கட்டலாம். வெளிநாடு வாழ் இந்தியராக ஆன பிறகு புதிய PPF கணக்கைத் திறக்க முடியாது. அதேபோல, 15 வருட முதிர்வு காலத்திற்குப் பிறகு கணக்கை மூட வேண்டும் என்பதும், முதிர்வு காலத்தை நீட்டிக்க முடியாது என்பதும் இந்திய அரசின் சட்டங்கள் கூறுகின்றன. அதேசமயம் பிபிஎஃப் கணக்கைத் திறந்து 5 வருடங்கள் முடிந்த பிறகுதான் அதை மூட முடியும்.
வட்டி விகிதங்கள் ஒவ்வொரு காலாண்டிலும் இந்திய அரசாங்கத்தால் மதிப்பாய்வு செய்யப்படும் என்பதோடு மாற்றப்படலாம் என்றாலும், கிடைக்கும் வட்டிக்கு வரி விலக்கு உண்டு.
மேலும் படிக்க | 8th Pay Commission: 8-வது ஊதியக் குழு இல்லை! மத்திய அரசின் பதில்!
பிபிஎஃப் கணக்கில் உள்ள பணத்தை திரும்பப் பெறுவதற்கான நடைமுறை
உங்கள் குழந்தை முதன்மைக் கணக்கு வைத்திருப்பவராக இருந்தால், உங்கள் உயர்கல்வி அல்லது உங்கள் பிள்ளையின் உயர்கல்விக்குப் பணம் செலுத்த ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு PPF கணக்கை முன்கூட்டியே மூடலாம். அதேபோல, முதிர்ச்சியடைந்த பிறகு உங்கள் கணக்கை மூடிவிட்டு, பணத்தை எடுக்கலாம். இருப்பினும், இந்த பணத்தை நீங்கள் வெளிநாட்டிற்கு அனுப்ப முடியாது.
பிபிஎஃப் கணக்கை மூட, PPF திரும்பப் பெறும் படிவம், உங்கள் வங்கியில் இருந்து PPF பாஸ்புக், புகைப்பட அடையாள அட்டை மற்றும் உங்கள் NRO கணக்கிலிருந்து ரத்து செய்யப்பட்ட காசோலையை சமர்ப்பிக்க வேண்டும். அனைத்து நடைமுறைகளையும் முடிக்க நீங்கள் இந்தியாவில் இல்லை என்றால், அங்கீகார கடிதத்துடன் ஒரு பிரதிநிதியை நியமிக்கலாம். ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன் உங்கள் வங்கியின் கிளை மேலாளரால் சான்றளிக்கப்பட வேண்டும்.
செயல்முறை முடிந்ததும், உங்கள் பிபிஎஃப் கணக்கில் உள்ளத் தொகை, உங்கள் NRO கணக்கிற்கு மாற்றப்படும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ