PPF விதிகள் மாற்றம்: இனி எப்போது வேண்டுமானாலும் முழு பணத்தையும் திரும்பப் பெறலாம்!

ஒரு நபர் தனது பெயரில் ஒரு பிபிஎஃப் கணக்கை மட்டுமே திறந்துகொள்ள முடியும், இதன் முதிர்வு காலம் 15 ஆண்டுகளாகும். இதில் முதலீடு செய்த பணத்தை இடையில் திரும்பப் பெற முடியாது.  

Written by - RK Spark | Last Updated : Aug 9, 2022, 06:25 AM IST
  • பப்ளிக் பிராவிடென்ட் ஃபண்ட் நீண்ட கால முதலீட்டிற்கு ஏற்ற சிறந்த வழியாகும்.
  • இதன் முதிர்வு காலம் 15 ஆண்டுகளாகும்.
  • முதிர்வு காலம் முடிவதற்கு முன்பே பணம் தேவைப்படும் பட்சத்தில் அதனை பெற்றுக்கொள்ளலாம்.
PPF விதிகள் மாற்றம்: இனி எப்போது வேண்டுமானாலும் முழு பணத்தையும் திரும்பப் பெறலாம்! title=

பப்ளிக் பிராவிடென்ட் ஃபண்ட் நீண்ட கால முதலீட்டிற்கு ஏற்ற சிறந்த வழியாகும், இதில் உங்களுக்கு சரியான வட்டி கிடைக்கும்.  முதலீடு செய்யப்படும் பணம், அதில் பெறப்படும் வட்டி மற்றும் முதிர்வு காலம் முடிந்தவுடன் பெறப்படும் தொகை ஆகியவற்றுக்கும் வரிவிலக்கு உண்டு.  இதனால் பிபிஎஃப் முதலீட்டாளர்கள் மத்தியில் அதிகளவில் பிரபலமாக உள்ளது.  ஒரு நபர் தனது பெயரில் ஒரு பிபிஎஃப் கணக்கை மட்டுமே திறந்துகொள்ள முடியும், இதன் முதிர்வு காலம் 15 ஆண்டுகளாகும், இதில் முதலீடு செய்த பணத்தை இடையில் திரும்பப் பெற முடியாது என்று சிலர் தவறாக கருதுகின்றனர். ஆனால் அப்படி இல்லை., பிபிஎஃப் கணக்கின் முதிர்வு காலம் முடிவதற்கு முன்பே, உங்களுக்கு பணம் தேவைப்படும் பட்சத்தில் நீங்கள் அதனை பெற்றுக்கொள்ளலாம்.
 
பிபிஎஃப் கணக்கு வைத்திருப்பவரின் மனைவி மற்றும் குழந்தைகளுக்கு ஏதேனும் நோய் தொற்று ஏற்படும் சமயத்தில் பணத்தை பெற்றுக்கொள்ள முடியும்.  இது தவிர, கணக்கு வைத்திருப்பவர்கள் தங்கள் குழந்தைகளின் கல்வி செலவுகளுக்காக பிபிஎஃப் கணக்கிலிருந்து முழுப் பணத்தையும் எடுக்கலாம்.  ஒரு கணக்கு வைத்திருப்பவர் வெளிநாட்டு இந்தியராக (என்ஆர்ஐ) மாறினாலும், அவர் தனது பிபிஎஃப் கணக்கை மூடலாம்.  அதேசமயம் எந்த ஒரு கணக்கு வைத்திருப்பவரும் பிபிஎஃப் கணக்கைத் திறந்து 5 வருடங்கள் முடிந்த பிறகுதான் அதை மூட முடியும்.  முதிர்வு காலத்திற்கு முன் மூடப்பட்டால், கணக்கைத் திறந்த தேதியிலிருந்து மூடும் தேதி வரை 1% வட்டி கழிக்கப்படும். 

மேலும் படிக்க | 8th Pay Commission: 8-வது ஊதியக் குழு இல்லை! மத்திய அரசின் பதில்!

பிபிஎஃப் கணக்கின் முதிர்வுக்கு முன் கணக்கு வைத்திருப்பவர் இறந்துவிட்டால், ஐந்தாண்டு கணக்கில் பங்களிக்க வேண்டும் என்கிற நிபந்தனை அவரின் நாமினிக்கு பொருந்தாது.  நாமினி ஐந்து ஆண்டுகளுக்கு முன் பணத்தை எடுக்கலாம், ஆனால் கணக்கு வைத்திருப்பவர் இறந்த பிறகு கணக்கு அந்த கணக்கை தொடர நாமினிக்கு உரிமை இல்லை.  ஒரு கணக்கு வைத்திருப்பவர் முதிர்வு காலத்திற்கு முன் பணத்தை எடுக்க விரும்பினால், அவர் படிவத்தை பூர்த்தி செய்து பாஸ்புக் மற்றும் அதன் ஜெராக்ஸ் உடன் பிபிஎஃப் கணக்கு வைத்திருக்கும் தபால் அலுவலகம் அல்லது வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும்.  பிபிஎஃப் கணக்கின் தற்போதைய வட்டி விகிதம் ஆண்டுக்கு 7.1 சதவீதம்.  ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் ரூ.500 மற்றும் அதிகபட்சம் ரூ.1.5 லட்சம் வரை பிபிஎஃப்-ல் டெபாசிட் செய்யலாம்.

மேலும் படிக்க | ITR Filing Last Date: ட்விட்டரில் டிரெண்ட் ஆகும் ‘Extend Due Date Immediately’, நீட்டுக்குமா அரசு? 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News