குவைத்: மறு அறிவிப்பு வரும் வரை விசிட் விசாக்கள் ரத்து

Kuwait: Visit Family Visas suspended: குடும்ப விசா உள்ளிட்ட விசிட் விசா வழங்குவதை குவைத் நிறுத்தி வைத்துள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை இந்த விசாவை நிறுத்திவைக்க அந்நாடு முடிவு செய்துள்ளது.
குவைத்: குடும்ப விசா உள்ளிட்ட விசிட் விசா வழங்குவதை குவைத் நிறுத்தி வைத்துள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை இந்த விசாவை நிறுத்திவைக்க அந்நாடு முடிவு செய்துள்ளது.
திங்களன்று உள்துறை அமைச்சகம் தனது அறிக்கையில், "இந்த நடவடிக்கை விசா நடைமுறைகளை தயாரிப்பதற்கான புதிய விதிமுறைகளுடன் ஒரு புதிய பொறிமுறையைத் தயாரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது." முதல் துணைப் பிரதமரும் உள்துறை அமைச்சருமான ஷேக் அஹ்மத் நவாஃப் அல் அகமது அல் சபாவின் அறிவுறுத்தலின் அடிப்படையில் இந்த முடிவு எட்டப்பட்டது.
விசா வழங்கும் செயல்முறையை வரிசைப்படுத்தவும் மேம்படுத்தவும் வதிவிட விவகாரங்கள் துறை விதிமுறைகளை கொண்டு வர இது அனுமதிக்கும் என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | UAE: ஆன்லைனில் போதைப் பொருளை வாங்கினால் சிறை செல்ல நேரிடும்
உள்துறை அமைச்சகம், தனது ட்விட்டர் கணக்கில், 'முதல் துணைப் பிரதமரும் உள்துறை அமைச்சருமான லெப்டினன்ட் ஜெனரல் (ஓய்வு) ஷேக் அகமது அல்-நவாஃப் அல்-சபாவின் உத்தரவின் பேரில், குடும்பம் மற்றும் சுற்றுலாப் பயணங்களை வழங்குவதை நிறுத்த முடிவெடுத்துள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை இது அமலில் இருக்கும்’ என தெரிவித்துள்ளது.
கடந்த மாதங்களில் சுற்றுலா மற்றும் குடும்ப விசா மூலம் வந்த பல வெளிநாட்டினர், அவர்களின் விசா காலாவதியான போதிலும் நாட்டை விட்டு வெளியேறவில்லை. இதனால் விசா விதிகளை மீறியவர்களின் எண்ணிக்கை 20,000 ஆக அதிகரித்துள்ளது. இந்த முடிவில் விமான நிலையத்தில் சில நாட்டினருக்கு நேரடியாக வழங்கப்படும் இ-விசாக்கள் இல்லை.
குவைத்தில் 2022 ஆம் ஆண்டில் சுற்றுலா மற்றும் குடும்ப விசா மூலம் வந்த வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 70,000 ஐ எட்டியுள்ளது. புதிய பொறிமுறையானது கட்டுப்பாடுகளைச் செயல்படுத்தும். மேலும் இதன் மூலம் விசா காலாவதியானவுடன் பயணிகள் உடனடியாக வெளியேறுவதற்கான உத்தரவாதமும் அளிக்கும். இதற்கு 3 மாதங்கள் நீட்டிப்பு வழங்கப்படாது.
மேலும் படிக்க | வளைகுடா பகுதிகளின் விமான கட்டணங்களில் கடும் ஏற்றம்: நடவடிக்கை தேவை என எம்பி கோரிக்கை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR