ஆயுஷ் சிகிச்சைக்காக வெளிநாட்டினர் இந்தியாவுக்குச் வருவதற்கு வசதியாக ஆயுஷ் விசாவை பிரதமர் மோடி அறிவித்தார். இந்திய பாரம்பரிய மருத்துவமுறை உலகம் முழுவதும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
உலகளாவிய ஆயுஷ் முதலீடு மற்றும் கண்டுபிடிப்பு உச்சி மாநாடு 2022 ஐ பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தபோது பிரதமர் ஆயுஷ் விசா தொடர்பான அறிவிப்ப்பை வெளியிட்டார்.
வெளிநாட்டினர் ஆயுர்வேதம் தொடர்பான மருத்துவ சிகிச்சைக்காக நாட்டிற்கு செல்வதற்கு வசதியாக சிறப்பு ஆயுஷ் விசா வகையை இந்தியா விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது. ஆயுஷ் மருந்துகள், சப்ளிமெண்ட்ஸ் மற்றும் அழகுசாதனப் பொருட்களின் உற்பத்தியில் இதுவரை இல்லாத அளவு வளர்ச்சியை இந்தியா கண்டிருக்கிறது.
2014 ஆம் ஆண்டில், ஆயுஷ் துறையின் வரவு-செலவு 3 பில்லியன் டாலருக்கும் குறைவாக இருந்த நிலையில், இன்று அது 18 பில்லியன் டாலருக்கும் அதிகமாக அதிகரித்துள்ளது. ஆயுஷ் தயாரிப்புகளின் ஏற்றுமதியை ஊக்குவிக்க கடந்த ஆண்டுகளில் முன்னோடியில்லாத முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆயுஷ் தயாரிப்புகளுக்கு சிறப்பு ஆயுஷ் முத்திரை உட்பட பல புதிய முயற்சிகளை ஆயுஷ் துறையில் மோடி அறிவித்தார். உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு தரமான ஆயுஷ் தயாரிப்புகளின் நம்பிக்கையை இது வழங்கும் என்று அரசு நம்புகிறது.
இந்தியா முழுவதும் ஆயுஷ் தயாரிப்புகளை மேம்படுத்துதல், ஆராய்ச்சி செய்தல் மற்றும் உற்பத்தி செய்வதை ஊக்குவிப்பதற்காக ஆயுஷ் பூங்காக்களின் வலையமைப்பை உருவாக்க அரசாங்கம் ஒரு திட்டத்தை வகுத்துள்ளது. மூலிகை ஊட்டச்சத்து சப்ளிமெண்ட்ஸ் உற்பத்தியாளர்களுக்கு வசதியாக 'ஆயுஷ் ஆஹார்' என்ற புதிய வகையையும் அறிவித்துள்ளது.
, ஆயுஷ் ஏற்றுமதி ஊக்குவிப்பு கவுன்சில் மற்றும் ஆயுஷ் இன்ஃபர்மேஷன் ஹப், ஆயுசாஃப்ட், ஆயுஷ் நெக்ஸ்ட் மற்றும் ஆயுஷ் ஜிஐஎஸ் ஆகியவற்றை உள்ளடக்கிய நான்கு ஆயுஷ் ஐசிடி முன்முயற்சிகள் தொடர்பான அறிவிப்பையும் பிரதமர் மோடி அறிவித்தார்.
குஜராத்தின் காந்திநகரில் 2022 ஆம் ஆண்டுக்கான உலகளாவிய ஆயுஷ் முதலீடு மற்றும் புத்தாக்க உச்சி மாநாட்டில் இந்த அறிவிப்புகள் வெளியாகின.
நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரல், டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், ஆயுஷ் துறையானது 2014 ஆம் ஆண்டிலிருந்து ஆண்டுக்கு 17 சதவிகிதம் கணிசமாக வளர்ந்து வருவதாகவும், இந்த ஆண்டு இறுதிக்குள் 23 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறினார்.
"தரமான சீரற்ற சோதனைகள் சாத்தியமில்லாத அல்லது மேற்கொள்ள கடினமாக இருக்கும் சந்தர்ப்பங்களில், பாரம்பரிய மருத்துவ நடைமுறைகளின் தாக்கத்தை ஆவணப்படுத்த, புதுமையான ஆய்வு வடிவமைப்புகளையும் செயற்கை நுண்ணறிவின் பயன்பாட்டையும் நாங்கள் ஆராய்ந்து வருகிறோம். பாரம்பரிய மருத்துவத்தின் ஆதாரத் தளத்தை வலுப்படுத்துவது அதை எளிதாக்க வேண்டும். சமூகங்களால் பயன்படுத்தவும், சிறந்த சுகாதார விளைவுகளை மேம்படுத்துவதும் இதன் நோக்கம் ஆகும். இது பொருளாதார ரீதியாகவும் மிகவும் ஆக்கப்பூர்வமானதாக இருக்கும்" என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் தெரிவித்தார்.
மேலும் படிக்க | அமிர்தவல்லி கல்லீரலை சேதப்படுத்துமா? ஆயுஷ் அமைச்சகத்தின் விளக்கம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR