UAE Residency Visa: நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய 7 முக்கிய மாற்றங்கள்
UAE Residency Visa: விசா சேவைகளுக்கான கட்டணங்கள் அதிகரிப்பு மற்றும் விசா காலாவதியான பிறகு நாட்டை விட்டு வெளியேறுவதற்கான நீட்டிக்கப்பட்ட கால அவகாசம் உள்ளிட்ட பல மாற்றங்கள் சமீபத்தில் செயல்படுத்தப்பட்டுள்ளன.
ஐக்கிய அரபு அமீரகத்தின் மிகப்பெரிய நுழைவு மற்றும் வதிவிட விசா சீர்திருத்தங்கள் அக்டோபர் 2022 இல் நடைமுறைக்கு வந்தன. அதிலிருந்து பல மாற்றங்கள் நடைமுறைக்கு வந்துள்ளன. இந்த சீர்திருத்தங்கள் நடைமுறைகளை நெறிப்படுத்தியுள்ளதோடு, நீண்ட கால கோல்டன் விசா திட்டத்தை விரிவாக்கியுள்ளது. மேலும், கிரீன் விசா என்ற புதிய ஐந்தாண்டு ரெசிடன்சி திட்டத்தையும் அறிமுகப்படுத்தியது.
விசா சேவைகளுக்கான கட்டணங்கள் அதிகரிப்பு மற்றும் விசா காலாவதியான பிறகு நாட்டை விட்டு வெளியேறுவதற்கான நீட்டிக்கப்பட்ட கால அவகாசம் உள்ளிட்ட பல மாற்றங்கள் சமீபத்தில் செயல்படுத்தப்பட்டுள்ளன. அமீரக ரெசிடன்சி தொடர்பாக அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய ஏழு அம்சங்களை பற்றி இங்கே காணலாம்.
- குழந்தைகளுக்கு ஸ்பான்சர் செய்வதற்கான விதிகள் தளர்த்தப்பட்டன:
இந்த நடவடிக்கை குடும்பங்களுக்கு பெரும் நிவாரணமாக வந்தது. இது அனைத்து குடியிருப்பு வகைகளுக்கும் பொருந்தும். குடியிருப்பாளர்கள் மகன்களுக்கு 25 வயது வரை ஸ்பான்சர் செய்யலாம். திருமணமாகாத மகள்களுக்கு ஸ்பான்சர் செய்ய வயது வரம்பு இல்லை.
- கோல்டன் விசா வைத்திருப்பவர்கள் 10 வருட விசாவில் பெற்றோருக்கு ஸ்பான்சர் செய்யலாம்:
நீங்கள் கோல்டன் விசா வைத்திருப்பவராக இருந்தால், உங்கள் பெற்றோருக்கு 10 வருட விசாக்களிலும் ஸ்பான்சர் செய்யலாம். முன்னதாக, நீண்ட கால வதிவிடத் திட்டப் பயனாளிகள், வழக்கமான வதிவிட உரிமைதாரர்களைப் போலவே, பெற்றோருக்கு ஓராண்டுக்கு நிதியுதவி செய்யலாம் என்ற முறை இருந்தது.
மேலும் படிக்க | இந்திய பட்ஜெட் 2023 வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு சாதகமா? இல்லை பாதகமா?
- விசா கட்டணங்கள் அதிகரிப்பு:
அடையாளம், குடியுரிமை, சுங்கம் மற்றும் துறைமுக பாதுகாப்பு (ICP) ஆகியவற்றிற்கான ஃபெடரல் அத்தாரிட்டி வழங்கும் அனைத்து சேவைகளையும் பெறுவதற்கான கட்டணம் 100 Dhs அதிகரித்துள்ளது. கூடுதல் ஸ்மார்ட் சேவைக் கட்டணம் எமிரேட்ஸ் ஐடி மற்றும் வதிவிட விசாக்களுக்கும் பொருந்தும்.
- ஃப்ரீசோன் விசாக்களின் செல்லுபடியாகும் காலம் குறைந்தது:
ஐக்கிய அரபு அமீரகத்தில் வழங்கப்படும் ஃப்ரீசோன் விசாக்களின் செல்லுபடியாகும் காலம் மூன்று ஆண்டுகளில் இருந்து இரண்டு ஆண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளது.
- விசா காலாவதியான பிறகு ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து வெளியேற நீண்ட கால அவகாசம்:
வதிவிட விசா ரத்து செய்யப்பட்ட பிறகு ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து வெளியேறுவதற்கான சலுகைக் காலம் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் 60 முதல் 180 நாட்கள் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. முன்னர் இது 30 நாட்களாக இருந்தது.
- பாஸ்போர்ட்டில் விசா முத்திரைகளுக்கு பதில் எமிரேட்ஸ் ஐடி:
பாஸ்போர்ட்டில் வதிவிட விசா ஸ்டிக்கர்களை முத்திரையிடும் நடைமுறையை ஐக்கிய அரபு அமீரகம் நீக்கியுள்ளது. மாறாக, குடியிருப்பாளர்களின் எமிரேட்ஸ் ஐடிகள் அதிகாரப்பூர்வமாக அவர்களின் வதிவிட ஆவணங்களாகச் செயல்படுகின்றன.
- 6 மாதங்களுக்கும் மேலாக வெளிநாட்டில் தங்கியிருப்பவர்களுக்கான மறு நுழைவு அனுமதி:
ஐக்கிய அரபு அமீரகத்துக்கு வெளியே குறிப்பிட்ட காலத்துக்கு மேல் தங்கியிருந்தால், முன்னர் ரெசிடன்சி ரத்து செய்யப்படும். இருப்பினும், இப்போது அத்தகைய குடியிருப்பாளர்கள் அதற்கான காரணத்தைக் குறிப்பிட்டு மறு நுழைவு அனுமதிக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்டதும், விண்ணப்பதாரர் ஒப்புதல் தேதியிலிருந்து 30 நாட்களுக்குள் நாட்டிற்குள் நுழைய வேண்டும்.
மேலும் படிக்க | அமீரகம் வாழ் தமிழர்களுக்கு முக்கிய செய்தி: பல்கலைக்கழக சேர்க்கை விதிகளில் மாற்றம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ