அமீரகத்தில் வசிக்கும் இந்தியர்களுக்கு மிக நல்ல செய்தி!! அக்டோபர் 30 முதல், எமிரேட்ஸ் இந்தியாவில் பெங்களூருவுக்கு பயணிக்கும் பயணிகளுக்கு அவர்களின் சிக்னேச்சர் A380 விமானங்களில் பறக்கும் வாய்ப்பை வழங்குகிறது. நேற்று, ஏர்லைன்ஸ் நிறுவனம் தனது முதல் ஏ380 விமானத்தை துபாயில் இருந்து பெங்களூருவுக்கு அனுப்பியது. இந்நிகழ்ச்சியில் விமான ரசிகர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டு விமானத்தை ஆரவாரத்துடன் வரவேற்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அக்டோபர் 30 முதல், துபாய் மற்றும் பெங்களூரு இடையே EK568 மற்றும் EK569 ஆகிய எமிரேட்ஸின் A380 விமானங்கள் இயங்கும். தினமும், விமானம் ஏர்லைன்ஸ் மையத்திலிருந்து இரவு 9.25 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் உள்ளூர் நேரப்படி அதிகாலை 2.30 மணிக்கு பெங்களூருவுக்கு வந்து சேரும். ரிடர்ண் விமானம் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து அதிகாலை 4.30 மணிக்கு புறப்பட்டு, துபாய்க்கு காலை 7.10 மணிக்கு (உள்ளூர் நேரம்) போய் சேரும். எமிரேட்ஸ் அதன் மற்ற வைட் பாடி விமானமான போயிங் 777 ஐப் பயன்படுத்தி தினசரி இரண்டு கூடுதல் விமானங்களை இயக்குகிறது.


எமிரேட்ஸ் தனது முதல் A380 சேவையை 2014 இல் துபாய்-மும்பை வழித்தடத்தில் அறிமுகப்படுத்தியது. மேலும் இந்த பிரபல விமானம் மூலம் விமான சேவை பெறும் இந்தியாவின் இரண்டாவது நகரமாக பெங்களூரு மாறும்.


மேலும் படிக்க | ஆஸ்திரேலியாவில் படிக்கும் இந்திய மாணவர் மீது தாக்குதல்: பல இடங்களில் கத்திக்குத்து 


எமிரேட்ஸின் தலைமை வணிக அதிகாரி அட்னான் காசிம், “பெங்களூரு மற்றும் கர்நாடகா மாநிலத்துடன் நாங்கள் பகிர்ந்து கொள்ளும் சிறப்பான உறவு, பரஸ்பர வளர்ச்சி மற்றும் செழிப்பு ஆகியவற்றின் அடையாளமாகும். மேலும் தென்னிந்தியாவில் உள்ள பயணிகளுக்கான இந்த முக்கிய நுழைவாயிலில் A380 சேவைகளை அறிமுகப்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இன்றைய விமானம், இந்த நகரத்துடன் நாங்கள் பகிர்ந்து கொள்ளும் பயனுள்ள உறவுக்கு சான்றாகும். 


மேலும் இந்த மாதத்தின் பிற்பகுதியில் எங்களின் திட்டமிடப்பட்ட தினசரி A380 சேவைகளைத் தொடங்கும் போது, ​​பெங்களூருக்குச் செல்லும் மற்றும் வரும் பயணிகளுக்கு, அனைத்து கேபின்களிலும் முதன்மையான அனுபவத்தை வழங்க நாங்கள் காத்திருகிறோம்” என்று கூறினார். 


"இந்தியா ஒரு பரந்த சந்தையாகும். எங்கள் நெட்வொர்க் முழுவதும் உள்ள இடங்களுகான எங்கள் சேவைகளுக்கு இங்கு அதிக தேவை உள்ளது.  எங்கள் A380 சேவையை விரிவுபடுத்தி, நாட்டில் ஒரு கூடுதல் புள்ளியை சேர்க்க நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்." என்று அவர் மேலும் தெரிவித்தார்.


மேலும் படிக்க | ஐக்கிய அரபு அமீரகத்தில் பணிபுரிபவரா நீங்கள்? உங்களுக்கு ஒரு சூப்பர் செய்தி!! 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ