இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் தீபாவளி கொண்டாட்டங்கள் தொடங்கியுள்ள நிலையில், பண்டிகையை முன்னிட்டு துபாயில் தங்க நகைகள் வாங்குவது சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. மற்ற விலைமதிப்பற்ற உலோகங்களுடன் ஒப்பிடும் போது இந்தியர்கள் தங்கத்தின் மீது அதிக ஈடுபாடு காட்டுகின்றனர். துபாயில் விற்கப்படும் தங்கத்தின் தூய்மையின் காரணமாக, இந்தியாவிற்கு பதிலாக பல இந்தியர்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து தங்கம் வாங்குவதை நீண்டகாலமாக வழக்கமாக கொண்டுள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நகரத்தில் நடைபெறும் அனைத்து முக்கிய விழாக்களிலும் பங்கேற்கும் துபாய் தங்கம் மற்றும் நகைக் குழுமம், துபாயின் வர்த்தகத்தில் 35 சதவிகிதம் தங்கம் மற்றும் நகை தயாரிப்புகளில் உள்ளதாக கூறுகிறது.


துபாய் தங்கம் மற்றும் நகைகளை வாங்கும் இடம் என தங்க சந்தை நிபுணர்கள் கருதுகிறார்கள். ஏனெனில் அங்கு சிறந்த விலையும் அதிக அளவு வகைகளும் கிடைக்கின்றன. இந்தியாவின் எந்தப் பகுதியில் நகைகள் தயாரிக்கப்பட்டாலும், அவை துபாய்க்கு வந்துவிடும். இந்தியர்கள் நகை வாங்க துபாய்தான் சிறந்த இடம் என்று கூட பல நிபுணர்கள் கூறுவதுண்டு. 


தென்னிந்தியாவில், உதாரணமாக சென்னையில் தென்னிந்திய பாணி நகைகள் கிடைக்கும். டெல்லிக்குச் சென்றால் வட இந்திய (வடிவமைக்கப்பட்ட) நகைகள் கிடைக்கும், மும்பைக்குச் சென்றால் அங்கு விற்கப்படும் நகைகளின் டிசைன் மேற்குப் பகுதிகளுக்கான டிசைனாக இருக்கும். ஆனால் இந்தியர்கள் துபாய்க்கு சென்றால், கேரளா முதல் காஷ்மீர் வரை அனைத்து விதமான மற்றும் பாணியிலான இந்திய நகைகளையும் வாங்கலாம். மிகச்சிறந்த விலையிலும் இந்த நகைகளை வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. துபாயில் நகைகளின் விலை சுமார் 12 முதல் 15 சதவிகிதம் வரை மலிவாக இருக்கும். 


மேலும் படிக்க | தாயகத்தின் வேர்களை மறவாத மருத்துவர் உமா கவினி! படித்த கல்லூரிக்கு ₹20 கோடி நன்கொடை 


பயணிகள் எவ்வளவு நகையை கொண்டு செல்ல முடியும்? நிபுணர்கள் கூறுவது என்ன?


நீங்கள் இந்தியாவிற்கு தங்க நகைகளை வாங்கிச் செல்ல திட்டமிட்டால் கவனமாக இருக்க வேண்டும் என்று வரி வல்லுநர்கள் கூறுகிறார்கள்.


இந்தியா திரும்பும் இந்தியப் பயணிகளுக்கு (ஒரு வருடத்திற்கும் மேலாக) மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் (CBIC) நிர்ணயித்த வரம்புகளை நிபுணர்கள் விளக்கியுள்ளார்கள். ஓராண்டுக்கு மேல் வெளிநாட்டில் வசிக்கும் ஆண் பயணிகள், 20 கிராம் வரையிலான, 2,500 திர்ஹம் (ரூ.50,000) மதிப்பிலான தங்க நகைகளை கொண்டு வரலாம். பெண் பயணிகளுக்கு இந்த வரம்பு இரட்டிப்பாகும். அதாவது, 5,000 Dh (Rs100,000) மதிப்பிலான தங்கத்தை கொண்டு வரலாம். 


"தங்கத்தை இறக்குமதி செய்வது (ஆபரணங்கள் உட்பட) வரையறுக்கப்பட்ட சூழ்நிலைகளில் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த எந்தவொரு பயணிகள் அல்லது இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள், குறைந்தபட்சம் ஆறு மாதங்கள் வெளிநாட்டில் தங்கிய பிறகு இந்தியாவுக்கு வந்தால், சுங்கக் கட்டணம் செலுத்தி அதிகபட்சம் ஒரு கிலோ தங்கத்தை (ஆபரணங்கள் உட்பட) இறக்குமதி செய்யலாம். நடைமுறையின்படி, ஒரு பயணி வழக்கமாக அணியும் பெயரளவு மதிப்புள்ள நகைகள் வருகையின் போது அனுமதிக்கப்படலாம்." என நிபுணர்கள் கூறுகிறார்கள்.


தங்கக் கட்டிகள் மீதான சுங்க வரி சமீபத்தில் 7.5 சதவீதத்தில் இருந்து 12.5 சதவீதமாக உயர்த்தப்பட்டது என்று விளக்கப்பட்டது. 2.5 சதவீத விவசாயம் மற்றும் உள்கட்டமைப்பு வரியுடன் (AIDC), மொத்த சுங்க வரிகள் 15 சதவீதமாக இருக்கும். மேலும், கூடுதலாக மூன்று சதவீத சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) பொருந்தும். இதன் விளைவாக மொத்த இறக்குமதி வரி 18.45 சதவீதமாக உள்ளது. மே 22ல் தங்கம் இறக்குமதியில் இந்தியா ஆண்டுக்கு ஆண்டு 790 சதவீதம் அதிகரிப்பை பதிவு செய்ததால் வரிகள் அதிகரிக்கப்பட்டன. 


மேலும் படிக்க | இந்து முறைப்படி இஸ்லாமியருக்கு இறுதிச்சடங்குகள்! சவுதி அரேபிய NRI குடும்பம் வருத்தம் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ