ரியல் எஸ்டேட் சந்தையில் என்ஆர்ஐ முதலீடு அதிகரித்துள்ளது. இது டெவலப்பர்களுக்கான நுகர்வோர் சந்தைக் களத்தை விரிவுபடுத்தியது. மேலும், உலகளாவிய வாழ்க்கைத் தரத்தைப் பூர்த்தி செய்ய கட்டுமான நிறுவனங்களின் திட்டங்களை நிலைநிறுத்தி அதிகரிக்க இது ஊக்குவிக்கிறது. கார்ப்பரேட் கலாச்சாரம் உருவாகி வருவதால் ரியல் எஸ்டேட் துறையில் நல்ல அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக துறை நிபுணர்கள் கூறுகிறார்கள். அதிக ஊதியம் பெறும் தொழில் வாய்ப்புகள் அளவிடக்கூடியதாகி வருகின்றன. மேலும் பன்னாட்டு நிறுவனங்களுக்காக கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் உருவாகி வருகின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஒன்றொடு ஒன்று பின்னிப்பிணைந்துள்ள இந்த காரணிகளின் விரிவாக்கம் அனைத்தும் இந்தியாவில் முதலீடு செய்வதற்கும் குடியேறுவதற்கும் வெளிநாடு வாழ் இந்தியர்களின் (என்ஆர்ஐகளின்) ஆர்வத்தை அதிகரிப்பதற்கு பங்களித்துள்ளது. 


என்ஆர்ஐ-கள் பெரும்பாலும் இந்தியாவில் ஆடம்பர வீடுகள் (லக்சரி ஹோம்ஸ்) மற்றும் விடுமுறை கால வில்லாக்களில் (ஹாலிடே வில்லா) ஆர்வம் காட்டுகின்றனர்.


மேலும் படிக்க | வெளிநாடுவாழ் இந்தியரா நீங்கள்? உங்களுக்கான டாப் முதலீட்டு திட்டங்கள் இதோ 


இந்திய ரியல் எஸ்டேட் சந்தை மந்தமாக இருந்த நேரத்தில் என்ஆர்ஐ ரியல் எஸ்டேட் முதலீடுகள் வந்தன. அவர்கள் சொகுசு வீடுகள் மற்றும் விடுமுறை கால வில்லாக்களில் அதிக ஆர்வம் காட்டியுள்ளனர். இது ரியல் எஸ்டேட் துறைக்கு ஒரு நம்பிக்கைக்குரிய குறிகாட்டியாகும்.  ஏனெனில் இது மற்ற முதலீட்டை விட அதிக மற்றும் சாதகமான வருவாயை ஈர்க்கும் ஒரு கவர்ச்சியான வழியாக தொடர்ந்து இருந்துள்ளது. 


போக்குவரத்து வசதிகளுடன் நன்கு இணைக்கப்பட்ட வாழ்விடம், நாளுக்கு நாள் அதிகரித்து வரும் உள்கட்டமைப்பு வளர்ச்சிகள் ஆகியவவை என்ஆர்ஐ-களின் கவனத்தை கவர்ந்துள்ளன என்றே கூறலாம். 


தங்கள் சொந்த நாட்டுடன் தொடர்புகளை ஏற்படுத்த முயற்சிப்பது மற்றும் இதேபோன்ற வாழ்க்கை முறையை அனுபவிப்பதற்கான வாய்ப்பை பெறுவது, சமூக மற்றும் கலாச்சார அடையாளத்தைப் பகிர்ந்து கொள்ள ஏங்குவது ஆகியவை, இந்த துறையில் என்ஆர்ஐ-களால் ஏற்பட்டுள்ள அற்புதமான வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளன. இந்தியாவில் அசையா சொத்துகளில் முதலீடு என்ஆர்ஐ-களுக்கு மதிப்புமிக்கதாக கருதப்படுகிறது.


என்ஆர்ஐ முதலீடுகளுக்கு டெல்லி, சென்னை, பூனே, பெங்களூரு ஆகிய நகரங்களும், மேலும் சில வளர்ந்து வரும் நகரங்களும் ஏற்ற மையங்களாக பார்க்கப்படுகின்றன. இந்தியாவில் ஆடம்பர வீடுகளில் முதலீடு செய்வதில் ஆர்வமுள்ள என்ஆர்ஐகள் மற்றும் வெளிநாட்டினரின் கவனத்தை இந்த நகரங்கள் ஈர்த்துள்ளன. 


விடுமுறை இல்லங்கள் அல்லது குறுகிய காலப் பயணங்களுக்காக, வெளிநாடு வாழ் இந்தியர்கள் மலைப்பாங்கான பகுதிகளில் அழகான அமைப்புகள் மற்றும் மெய்சிலிர்க்க வைக்கும் புவி-இயற்பியல் இருப்பிடங்களில் முதலீடு செய்கின்றனர். கோவா, சென்னை, மணாலி, ஜிராக்பூர் போன்றவை, விடுமுறை இல்லங்களுக்கு மிகவும் கவனிக்கப்பட்ட இடங்களாகும். அதிகமான வருமானம் மற்றும் சுய பயன்பாடு ஆகியவை இவற்றை வாங்குவதற்கு பின்னால் உள்ள முக்கிய காரணங்களாக உள்ளன. 


மேலும் படிக்க | Pravasi Bharatiya Divas: கலந்துகொள்ள காத்திருக்கும் அமீரகம் வாழ் இந்தியர்கள் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ