உகாண்டாவில் இந்தியருக்கு நடந்த கொடூரம் சம்பவம் தற்போது பரப்பரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதன்படி களப் படைப் பிரிவைச் சேர்ந்த ஒரு போலீஸ் கான்ஸ்டபிள் இளம் இந்திய தொழிலதிபர் (என்ஆர்ஐ தொழிலதிபர்) மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார். இதில் பலத்த காயமடைந்த 24 வயது இந்திய இளைஞர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். தற்போது அந்த  தொழிலதிபர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார். இறந்தவர் குந்தாஜ் படேல் என போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த நிலையில் தற்போது இந்த சம்பவத்தை செய்த போலீஸ் கான்ஸ்டபிள் மீது கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். இச்சம்பவம் இம்மாதம் 27ஆம் தேதி (வியாழக்கிழமை) உகாண்டாவின் கிசோரோ நகரில் இடம்பெற்றுள்ளது.


மேலும் படிக்க | அயோதிக்கு வந்த NRI பெண்ணிடம் திருட்டு: பாஸ்போர்ட், பணம் மாயம் 


குஜராத் மாநிலம் கெடா மாவட்டத்தில் உள்ள தஸ்ராவைச் சேர்ந்த குந்தாஜ் படேல் (24) என்பவர் தனது மனைவியுடன் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு உகாண்டாவுக்கு வேலைக்காகச் சென்றுள்ளார். அங்கு அண்ணன் நடத்தும் ஹார்டுவேர் கடையில் வேலை பார்த்துவிட்டு வெளியில் சிறு வியாபாரம் செய்து வந்துள்ளார் அவை. இந்நிலையில், வியாழக்கிழமை வழக்கம்போல் ஹார்டுவேர் கடைக்கு பணிக்காகச் சென்றார். மதியம் கடைக்கு வந்த வாடிக்கையாளருடன் அரட்டை அடித்துக் கொண்டிருந்த போது, ​​எப்.எப்.யு.வைச் சேர்ந்த போலீஸ் கான்ஸ்டபிள் எலியோடா குமிஜாமு துப்பாக்கியால் பட்டேலை நோக்கி சரமாரியாக சுட்டுள்ளார். 


பின்னர், அங்கிருந்து தப்பி ஓட முயன்றபோது, ​​அப்பகுதி மக்கள் அவரை பிடித்து போலீசுக்கு தகவல் அளித்துள்ளார். அதன்பின், பலத்த காயமடைந்த படேல், சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அவர் உயிரிழந்தார்.


இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் எலியோடா குமிஜாமுவை கைது செய்து விசாரித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | தோஹாவில் 8 இந்திய கடற்படை முன்னாள் அதிகாரிகள் கைது! 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ