பிலிப்பைன்ஸ் வியட்நாம் கடற்பகுதியில் விபத்து! 300 பேர் பயணித்த கப்பல் கவிழ்ந்தது
Ship Accident : பிலிப்பைன்ஸ் - வியட்நாம் கடற்பகுதியில் கப்பல் விபத்து: பயணிகளை மீட்க இந்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு வைகோ கடிதம்
சென்னை: பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாம் கடற்பகுதியில் விபத்துக்குள்ளான கப்பலை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு இந்திய வெறியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களுக்கு, மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலளார் வைகோ எம்.பி. அவர்கள் இன்று ( 08.11.2022 ) கடிதம் எழுதியுள்ளார். அதில், பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாம் கடற்பகுதியில் விபத்துக்குள்ளான கப்பலை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்ளவே இந்தக் கடிதத்தை எழுதுகிறேன் என்று திரு வைகோ தெரிவித்துள்ளார்.
விபத்தில் சிக்கிய கப்பலில் 306 இலங்கை அகதிகள் பயணித்துள்ளனர். 40க்கும் மேற்பட்ட குழந்தைகளும் பெண்களும் இருப்பதாகத் தெரிகிறது. கப்பல் சேதமடைந்து உள்ளதால் எந்த நேரத்திலும் மூழ்கும் அபாயம் உள்ளது. அந்தக் கப்பலில் பயணித்தவர்கள் தங்கள் உயிர்களைக் காக்கப் போராடி வருகின்றார்கள்.
மேலும் படிக்க | Brain Health: மூளை சோர்வை நீக்கி ‘மன அமைதியை’ தரும் அற்புத மூலிகைகள்!
எனவே, இந்திய பாதுகாப்புத் துறையுடன் தொடர்புகொண்டு, கடற்படை மீட்புக் கப்பலை அனுப்பி, விபத்துக்குள்ளான பணிகளை காப்பாற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன், என்று வைகோ அவர்கள் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
கப்பல் தொடர்பு எண் 870776789032 என்ற தொலைபேசி எண்ணையும் மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலளார் வைகோ எம்.பி தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
படகு மூழ்கியதை அடுத்து, புலம்பெயர்ந்தோர் என சந்தேகிக்கப்படும் சுமார் 300 பேர் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க | பேலியோ டயட்டால் அதிகரித்த நீரிழிவு! நடிகர் பரத் கல்யாணின் மனைவி மரணம்
படகில் இருந்த இலங்கைப் பிரஜை ஒருவர் கடற்படையினரைத் தொடர்பு கொண்டு, தாங்கள் ஆபத்தில் இருப்பதாக தெரிவித்ததை அடுத்து இந்த விபத்து சம்பவம் தெரியவந்தது.
இலங்கையில் நீண்ட காலமாக தொடரும் உள்நாட்டுப் போர் மற்றும் பொருளாதார சிக்கல்களால், மக்கள், அபாயகரமான சட்டவிரோத படகுப் பயணங்களை மேற்கொள்வது வழக்கமாகிவிட்டது.
இலங்கையில் அண்மைக்காலமாக ஏறட்டுள்ள பொருளாதார நெருக்கடியிலிருந்து தப்பித்து வேறு நாடுகளுக்கு சட்டவிரோதமாக இடம்பெயரும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது.
மேலும் படிக்க | அதிக வட்டி தரும் வங்கிகள்! FD களுக்கு 7%க்கும் மேல் வட்டி தரும் இந்திய வங்கிகள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ