சென்னை: சிக்கல் சிங்காரவேலர் ஆலயத்தில் சிங்கப்பூர் உள்துறை அமைச்சர் காசி விஸ்வநாதன் சண்முகம் சாமி தரிசனம் சிறப்பு ஹெலிகாப்டர் மூலம் வருகை தந்த அவருக்கு ஆட்சியர் அருண் தம்புராஜ் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். சிங்கப்பூரின் மூத்த அமைச்சரும் தற்போதைய உள்துறை அமைச்சருமான காசி விஸ்வநாதன் சண்முகம் தற்போது சாமி தரிசனம் செய்வதற்கு தமிழகம் வருகை தந்துள்ளார். குறிப்பாக சிங்கப்பூர் உள்துறை அமைச்சர் காசி  விஸ்வநாதன் சண்முகம் ஒரு முருக பக்தர் ஆவார். ஆண்டுக்கு இரு முறை தமிழகம் வந்து முருகன் கோவில்களில் வழிப்பாடு செய்துவிட்டு செல்வார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்த வகையில் இன்று நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள சிக்கல் சிங்காரவேலரை தரிசிக்க தற்போது வந்துள்ளார். சிங்கப்பூர் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து விமானம் மூலம் கோவை விமானம் நிலையம் வருகை தந்து அங்கிருந்து சிறப்பு ஹெலிகாப்டர் மூலம்  சிங்கப்பூர் உள்துறை அமைச்சர் காசி விஸ்வநாதன் சண்மும் நாகை வருகை தந்தார்.


மேலும் படிக்க | மாறுகிறது சனியின் பாதை: இந்த ராசிகளின் வாழ்வில் பெரிய மாற்றங்கள் ஏற்படும் 


நாகப்பட்டினம் ஆயுதப் படை மைதானத்தில் வந்து இறங்கிய அவருக்கு நாகை மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ், காவல் கண்காணிப்பாளர் ஜவகர் ஆகியோர் பூங்கத்து கொடுத்து வரவேற்றனர்.  முன்னதாக சிங்கப்பூர் உள்துறை அமைச்சர் காசி விஸ்வநாதன் சண்முகம் வருகையொட்டி மாவட்டத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.


சிறப்பு காவல் படையினரும் கண்காணிப்பில்  ஈடுபட்டிருந்தனர். அதனைத் தொடர்ந்து கார் மூலம் சிக்கலில் அமைந்துள்ள  சிங்காரவேலர் ஆலயத்திற்கு மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் ,மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் உள்ளிட்டார் கோவிலுக்கு அழைத்துச் சென்றனர்.


மேலும் படிக்க | எல்லையோர ஆயுதப் படைகளில் கான்ஸ்டபிள் பணியிடங்கள் காலி! இப்படி விண்ணப்பிக்கவும்


சிக்கல் சிங்காரவேலர் ஆலயத்தில் அமைச்சர் காசி விஸ்வநாதன் சண்முகம் சாமி தரிசனம் செய்தார். அதற்கான ஏற்பாடுகளை முன்கூட்டியே கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர். தொடர்ந்து சிக்கல் சிங்காரவேலர் ஆலயத்தில் சிறப்பு அபிஷேக ஆராதனையும் நடைபெற்றது.


இந்த ஆராதனையில் சிங்கப்பூர் அமைச்சர் காசி விஸ்வநாதன் சண்முகம் பங்கேற்று சாமி தரிசனம் செய்தார். தரிசனத்தை முடித்து விட்டு நாகை ஆயுதப்படை மைதானத்தில் காத்திருந்த சிறப்பு ஹெலிகாப்டர் மூலமாக  சென்னைக்கு செல்கிறார். அதனைத் தொடர்ந்து திருப்பதிக்கு சென்று சாமி தரிசனம் செய்ய இருப்பதாக அமைச்சரின் வட்டாரங்கள் தெரிவித்தனர்


மேலும் படிக்க | விருச்சிக ராசியில் நுழையும் சுக்கிரன், இந்த 6 ராசிகளுக்கு பண வரவு 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ