எல்லையோர ஆயுதப் படைகளில் கான்ஸ்டபிள் பணியிடங்கள் காலி! இப்படி விண்ணப்பிக்கவும்

Sashastra Seema Bal Jobs: எல்லையோர ஆயுதப் படைகளில் கான்ஸ்டபிள் பணியில் விருப்பமுள்ள விளையாட்டு வீரர்களுக்கு அரிய வாய்ப்பு. விளையாட்டு வீரர்களுக்கான இடஒதுக்கீட்டின் கீழ் இந்த பணியிடங்கள் நிரப்பப்படும்...

Written by - Malathi Tamilselvan | Last Updated : Oct 6, 2022, 02:31 PM IST
  • எல்லையோர ஆயுதப் படைகளில் வேலைவாய்ப்பு
  • கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது
  • விளையாட்டு வீரர்களுக்கான இடஒதுக்கீட்டின் கீழ் பணியிடங்கள் நிரப்பபடும்
எல்லையோர ஆயுதப் படைகளில் கான்ஸ்டபிள் பணியிடங்கள் காலி! இப்படி விண்ணப்பிக்கவும் title=

Sashastra Seema Bal Jobs: எல்லையோர ஆயுதப் படைகளில் கான்ஸ்டபிள் பணியில் விருப்பமுள்ள விளையாட்டு வீரர்களுக்கு அரிய வாய்ப்பு. விளையாட்டு வீரர்களுக்கான இடஒதுக்கீட்டின் கீழ் இந்த பணியிடங்கள் நிரப்பப்படும். சஹஸ்திர சீமா பல் எனப்படும் எல்லையோர ஆயுதப் படையில் உள்ள காலி இடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.  விளையாட்டு வீரர்களுக்கான இடஒதுக்கீட்டின் கீழ் இந்த பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. 18 முதல் 23 வயதுக்கு உட்பட்டவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். இடஒதுக்கீட்டு விதிமுறைகளின்படி வயது வரம்பில் வழக்கமான தளர்வு அளிக்கப்படும். 

எனவே, ஆர்வமும், தகுதியும் உள்ள விளையாட்டு வீரர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம் சம்பளம்  21700 முதல் 69100 வரையில் இருக்கும் என்று கூறப்படுகிறது. மொத்தம் 399 காலியிடங்கள், இந்த ஆட்சேர்ப்பில் நிரப்பப்படும்.

மேலும் படிக்க | பேங்க் வேலை! ஆரம்ப சம்பளமே மாதம் ரூ.63840! அசத்தும் வேலைவாய்ப்பு

கல்வித் தகுதி: விண்ணப்பதாரர்கள் 10-ம் வகுப்பு/SSLC தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றிருப்பவர்கள் மட்டுமே இந்த பணிக்கு விண்ணப்பிக்க வேண்டும்

விண்ணப்பக் கட்டணம்:  எல்லையோர ஆயுதப் படைகளில் கான்ஸ்டபிள் பணிக்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.100ஆகும். பட்டியல் சாதிகள், பழங்குடியினர் மற்றும் மகளிர் விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் ஏதும் கிடையாது.  

www.ssbrectt.gov.in/recruitments.aspx என்ற இணையதளத்தில், அனைத்து விவரங்களையும் தெரிந்துக் கொள்ளலாம்.

மேலும் படிக்க | மதுரை தபால் நிலையத்தில் வேலை வாய்ப்பு - நல்ல சம்பளம்; வாய்ப்பை தவறவிடாதீர்கள்

சசஸ்த்திர சீமை பலம் அல்லது எஸ்.எஸ்.பி. (Sashastra Seema Bal) என்னும் இந்திய துணை ராணுவப் படையானது, இந்திய-நேபாளம் மற்றும் இந்திய-பூட்டான் எல்லைப் பகுதியைப் பாதுகாக்கும் இந்திய அரசின் மத்திய காவல் ஆயுதப் படைகளுள் ஒன்றாகும். 
இந்த படையானது, உத்தராஞ்சல், உத்திரப் பிரதேசம், பீகார், மேற்கு வங்காளம் மற்றும் சிக்கிம் மாநிலங்களை உள்ளடக்கிய 1751 கி.மீ தொலைவிலான இந்திய - நேபாள எல்லைகளை பாதுகாக்கிறது. சிக்கிம், மேற்கு வங்காளம், அசாம்  மற்றும் அருணாச்சல் பிரதேசம்ஆகிய மாநிலங்களை உள்ளடக்கிய இந்திய-பூட்டான் எல்லைப் பகுதியையும் பாதுகாக்கிறது.

மேலும் படிக்க | டிசிஎஸ்ஸில் வேலை வேண்டுமா? இதோ விவரமான வழிமுறைகள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News