துபாயில் இருக்கும் தமிழர்களுக்கு ஒரு நல்ல செய்தி!! நீங்கள் துபாயிலிருந்து தமிழகம் வரும் எண்ணத்தில் இருந்தால், அதற்கான சரியான நேரம் இது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியாவின் பட்ஜெட் விமான நிறுவனமான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் துபாயிலிருந்து திருச்சி செல்லும் பயணிகளுக்கான விமான டிக்கெட் விலையில் அதிரடியான சலுகையை அறிவித்துள்ளது.


இந்த குறைந்த விலையில், துபாயில் இருந்து திருச்சி-க்கு தினமும் விமானங்கள் இயக்கப்படும் என்றும் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மே மாதம் 10 ஆம் தேதி முதல் ஜூன் மாதம் 22 வரை, துபாயின் மக்தூம் சர்வதேச விமான நிலையத்தில் திருச்சிக்கு செல்லும் பயணிகள் வெறும் 299 திர்ஹம்ஸில் பயண டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.



மேலும் படிக்க | தமிழகத்திலிருந்து UAE இடையிலான ஏற்றுமதியை அதிகரிக்க ஆதரவு: அமைச்சர் அன்பரசன்


இந்த காலகட்டத்தில், அதாவது மே 10 முதல் ஜுன் 22 வரை, துபாயிலிருந்து தமிழகம் செல்லும் எண்ணம் உள்ளவர்களுக்கு இது ஒரு ஜாக்பாட் செய்தியாக வந்துள்ளது.


ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் இந்த செய்தியை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. இந்தியாவில் இது பள்ளி விடுமுறை காலம் என்பதால், இந்த நேரத்தில் துபாயிலிருந்து பலர் தாயகம் வருவது வழக்கம். ஆகையால் இப்போது அளிக்கப்பட்டுள்ள இந்த சலுகை துபாயில் இருக்கும் தமிழர்களுக்கு பெரிய அளவிலான மகிழ்ச்சியை அளித்துள்ளது என்றே சொல்லலாம்.


மேலும் படிக்க | ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேரை நிபந்தனைகளுடன் விடுதலை செய்தது இலங்கை நீதிமன்றம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR