இலங்கையில் நடைபெற்று வரும் போராட்டங்களுக்கு மத்தியில், பிரதமர் மகிந்த ராஜபக்சவை தவிர அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா செய்துள்ளதாக பெரும் செய்தி வெளியாகியுள்ளது. பதவி விலகியவர்களில் மஹிந்த ராஜபக்ஷவின் மகன் நாமல் ராஜபக்ஷவும் அடங்குவார். இது தவிர கூட்டணி கட்சி பொதுச்செயலாளரும் பதிவியை ராஜினாமா செய்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அரசின் அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா செய்தனர்
இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக நடைபெற்று வரும் ஆர்ப்பாட்டங்களுக்கு மத்தியில் இலங்கையின் மத்திய அமைச்சர்கள் சபையின் அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா செய்துள்ளனர். பிரதமர் மகிந்த ராஜபக் ஷே, அதிகர் கோத்தபய ராஜபக் ஷே இருவர் மட்டுமே தங்கள் பதவியை ராஜினாமா செய்யவில்லை.


மேலும் படிக்க | இலங்கை யாழ்ப்பாணம் மாபெரும் கண்டன பேரணியில் மோதல்.. உயிர் தப்பித்த போலீசார்


பிரதமரின் மகனும் மத்திய அமைச்சர் பதவியை விட்டு விலகினார்
இலங்கையில் சமூக ஊடகங்களுக்கு தடை விதிக்கும் அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் மகன் நாமல் ராஜபக்சவும் அமைச்சர் பதவியில் இருந்து விலகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. நாமல் இலங்கையின் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


பதவி விலகல் குறித்து நாமல் ராஜபக்ஷ கூறியது என்ன?
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் மூத்த மகன் நாமல் ராஜபக்ஷ இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பின்னர் ட்வீட் செய்துள்ளார் அதில்., "அனைத்து இலாகாக்களில் இருந்தும் எனது ராஜினாமாவை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளேன். மக்கள் மற்றும் எல்.கே.ஏ அரசாங்கத்திற்கு ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த பிரதமர்களின் முடிவு. எனது வாக்காளர்கள், எனது கட்சி மற்றும் அம்பாந்தோட்டை மக்களுக்கு நான் எனும் உறுதுணையாக இருப்பேன்." என்று பதிவிட்டுள்ளார்.


 



 


இலங்கையில், மகிந்த ராஜபக்ஷவின் ஆளும் கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதான கூட்டணிக் கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும், மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் எம்.பி.யும், அமைச்சருமான தயாஸ்ரீ ஜெயசேகரவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடிதம் எழுதி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு அரசாங்கமே காரணம் எனவும், மக்களின் நலனுக்காக அரசாங்கத்தில் நீடிப்பது சரியாக இருக்காது எனவும் தயாஸ்ரீ தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.


மேலும் படிக்க | கலவரமாக மாறிய போராட்டம்! தடியடி, கண்ணீர் புகை குண்டு வீச்சு என இலங்கையில் பதற்றம்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR