மன்னார்: தனியார் பேருந்து சங்கத்தினர், ஆட்டோ ஓட்டுநர்கள் போராட்டம், மக்கள் அவதி
Sri Lanka Crisis: மன்னாரில் நேற்று (திங்கட்கிழமை) காலை முதல் மன்னார் தனியார் பேருந்து சங்கத்தினர் மற்றும் முச்சக்கர வண்டி ஓட்டுநர்கள் தனித்தனியாக எரிபொருள் கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக மக்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மன்னாரில் தனியார் பேருந்து உரிமையாளர்கள் மற்றும் முச்சக்கர வண்டி ஓட்டுநர்கள் எரிபொருள் கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் பொதுமக்கள் பாதிப்புகுள்ளாகினர்.
மன்னாரில் நேற்று (திங்கட்கிழமை) காலை முதல் மன்னார் தனியார் பேருந்து சங்கத்தினர் மற்றும் முச்சக்கர வண்டி ஓட்டுநர்கள் தனித்தனியாக எரிபொருள் கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக மக்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அரச போக்குவரத்து சேவையை பயன்படுத்த முடியாத வகையில் தனியார் பேருந்து உரிமையாளர்கள் வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் போக்குவரத்து வசதிகளை பயன்படுத்த காத்திருந்த மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு ஆளாகினர்.
மன்னார் டிப்போவுக்கு வழங்கப்பட்ட 13200 லீட்டர் டீசலில் மன்னார் மாவட்ட தனியார் போக்குவரத்துச் சங்க பேருந்துகளுக்கும் வழங்குமாறு உரிய தரப்பினால் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
எனினும் வழங்கப்பட்ட 13200 லீட்டர் டீசலில் தற்போது வரை 2413 லீட்டர் டீசல் மட்டுமே தனியார் பேருந்துகளுக்கு வழங்கப்பட்டது. எனினும் அதனை தொடர்ந்து டீசல் எதுவும் தனியார் பேருந்துகளுக்கு வழங்கப்படவில்லை.
மேலும் படிக்க | இலங்கையில் கடும் நெருக்கடி: எரிபொருள் வாங்க வருவோரை தாக்கும் ராணுவம், வீடியோ வைரல்
தனியார் பேருந்து சங்க உரிமையாளர்கள் மன்னார் டிப்போ அதிகாரிகளிடம் டீசல் கோரிய போதும் வழங்கப்படவில்லை. இந்த நிலையில் இன்று (5) காலை முதல் தனியார் பேருந்துகள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டதோடு, அரச போக்குவரத்து சேவையை மேற்கொள்ள முடியாத வகையில் தனியார் பேருந்துகள் வீதியை மறித்து போராட்டம் தொடர்கிறது. தமக்கான எரிபொருளையும் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதனால் போக்குவரத்துச் சேவைகள் சிறிது நேரம் முழுமையாக பாதிக்கப்பட்டதோடு, மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு ஆளாக வேண்டி இருந்தது.
இந்த நிலையில் இன்று காலை 10 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்தில் அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டி மேல் தலைமையில் அரச மற்றும் தனியார் போக்குவரத்துச் சங்க பிரதிநிதிகளுக்கு இடையில் சிறப்பு கலந்துரையாடல் இடம் பெற்றது.
இந்த கலந்துரையாடலில் பிரதேசச் செயலாளர், இராணுவம், காவல்துறை உயர் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது இலங்கை போக்குவரத்து சபையின் எண்ணைக் குதங்களில் இருந்து தனியார் பேருந்து சேவை பேருந்துகளுக்கு டீசல் வழங்குவது என்ற அரச நிலைப்பாட்டிற்கு அமைய மன்னார் சாலைக்கு 6600 லிட்டர் டீசல் வருமாக இருந்தால் அவற்றில் 2500 லிட்டர் டீசலையும்,13,200 லிட்டர் டீசல் வருமாக இருந்தால் 5000 லிட்டர் டீசல் தனியார் பேருந்து சேவை பேருந்துகளுக்கு வழங்குவது என இணக்கம் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் தனியார் பேருந்து சங்க உரிமையாளர்கள் முன்னெடுத்த பகிஷ்கரிப்பு போராட்டம் கைவிடப்பட்டது.
இதேவேளை மன்னாரில் சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டி ஓட்டுநர்கள் தமக்கு உரிய முறையில் எரிபொருளை வழங்க கோரி போராட்டத்தில் ஈடுபட்டதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | சட்டவிரோதமாக, வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல முயன்ற 51 இலங்கையர்கள் கைது
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR