எரிபொருள் நெருக்கடியால் இலங்கை முடக்கப்படும் நிலையில் உள்ளது. நாளுக்கு நாள் நிலைமை மோசமாகி வரும் நிலையில்,
எரிபொருள் வாங்க வருவோரை ராணுவம் கொண்டு அடக்கும் முறை கையாளப்பட்டு வருகிறது.
அத்தியாவசிய சேவைகளை கூட பேண முடியாத அளவிற்கு உள்ள இலங்கை அரசால், எரிபொருள் நெருக்கடி காரணமாக நாட்டை முடக்க அதிகாரபூர்வமாக தீர்மானிக்க முடியவில்லை என்றாலும், எரிபொருள் நெருக்கடி காரணமாக இந்த வாரம் நாடு ஊரடங்கை எதிர்கொள்ளும் அபாயம் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எரிபொருள் தட்டுப்பாடு நெருக்கடி நாட்டை பாதித்துள்ள நிலையில், எரிபொருளை இறக்குமதி செய்யும் வரை இந்த அபாய நிலை தொடரும் எனவும் அறிய முடிகின்றது.
மேலும் படிக்க | மன்னார் மக்களுக்கு முக்கிய செய்தி: இவர்களுக்கு இன்று எரிபொருள் வழங்கப்படுகிறது
பொதுப் போக்குவரத்துச் சேவைப் பேருந்துகள் மட்டுமன்றி, சுகாதார சேவைகள், கல்வி போன்ற அத்தியாவசிய சேவைகளையும் பராமரிக்க முடியாத அளவுக்கு எரிபொருள் நெருக்கடி மோசமடைந்துள்ளது.
மேலும், மருத்துவமனைகளில் அம்புலன்ஸ் சேவை மற்றும் மருத்துவ விநியோக சேவைகளுக்கு போதிய எரிபொருளை வழங்க முடியாத நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.
அரசாங்கம் கடந்த வாரம் அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுப்படுத்தப்பட்ட எரிபொருளை வழங்கிய போதிலும், கடந்த வாரமும் பல அத்தியாவசிய சேவைகள் தடைப்பட்டன.
இந்நிலையில், அடுத்த வாரத்திற்கு நாட்டு விவகாரங்களை சீராகப் பேணுவதில் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
அடுத்த வாரம் டீசல் கப்பல் ஒன்றும், 22ஆம் தேதி பெட்ரோல் கப்பல் ஒன்றும் இலங்கைக்கு வரும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில், தலைநகர் கொழும்புவில் செயல்பட்டு வரும் எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில், இலங்கை ராணுவ அதிகாரி ஒருவர் எரிபொருள் வாங்க வந்த பொது ஜனத்தை தாக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவை இங்கே காணலாம்:
இதற்கிடையில், இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு அத்தியாவசிய பொருட்களான அரிசி, பால், காய்கறி, பெட்ரோல், டீசல் உள்ளிட்ட பொருட்கள் விலை கிடுகிடு என உயர்ந்து வாங்க வழியின்றி அங்குள்ள மக்கள் ஒருவேளை உணவுக்கே மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருவதை அடுத்து இலங்கையில் வாழும் ஈழத்தமிழர்கள் அகதிகளாக அண்டை நாடுகளான ஆஸ்திரேலியா, இந்தியாவிற்கு இடம்பெயர்ந்து வருகின்றனர்.
மேலும் படிக்க | சட்டவிரோதமாக, வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல முயன்ற 51 இலங்கையர்கள் கைது
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR