மன்னாரில் அரசாங்க அதிபர், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆகியோரின் தலையீட்டில் விசேஷ அடிப்படையில் சுகாதார ஊழியர்களுக்கு எரிபொருள் வழங்கப்பட்டு வருகிறது.
நாடளாவிய ரீதியில் எரிபொருள் பிரச்சனை உச்ச கட்டத்தை எட்டியுள்ள நிலையில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டிமேல் மற்றும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ரி.வினோதன் ஆகியோரின் தலையீடு காரணமாக இன்றைய தினம் சனிக்கிழமை (ஜூலை 2) மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணி மனையின் கீழ் பணிபுரியும் சுகாதார ஊழியர்களுக்கு எரிபொருள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை (ஜூலை 1) மன்னார் சுகாதார ஊழியர்கள் தொழிற்சங்கம் மற்றும் மருத்துவர்கள் இணைந்து எரிபொருள் கோரி கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்ததுடன் கோரிக்கை அடங்கிய மனு ஒன்றையும் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரிடம் அளித்தனர்.
மேலும் படிக்க | முல்லைத்தீவு கடலை ஆக்கிரமிக்கும் இந்திய இழுவைப்படகுகள்; எதிர்க்கும் இலங்கை மீனவர்கள்
இந்த நிலையில் சுகாதார ஊழியர்களின் கோரிக்கையின் அடிப்படையில் இன்று சனிக்கிழமை (ஜூலை 2) காலை தொடங்கிய விசேஷ ஏற்பாட்டின் கீழ் சுகாதார ஊழியர்களுக்கு எரிபொருள் வழங்குவதற்கான ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் சுகாதார ஊழியர்களுக்கு பதிவுகளின் அடிப்படையில் மன்னார் பிரதான வீதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு அத்தியாவசிய பொருட்களான அரிசி, பால், காய்கறி, பெட்ரோல், டீசல் உள்ளிட்ட பொருட்கள் விலை கிடுகிடு என உயர்ந்து வாங்க வழியின்றி அங்குள்ள மக்கள் ஒருவேளை உணவுக்கே மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருவதை அடுத்து இலங்கையில் வாழும் ஈழத்தமிழர்கள் அகதிகளாக அண்டை நாடுகளான ஆஸ்திரேலியா, இந்தியாவிற்கு இடம்பெயர்ந்து வருகின்றனர்.
மேலும் படிக்க | இரண்டு குடும்பத்தை சேர்ந்த 4 பேர் இலங்கையிலிருந்து அகதிகளாக தனுஷ்கோடி வருகை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR