புலம்பெயர் தமிழர்களால் இலங்கை பொருளாதாரத்தை உயர்த்த முடியும்: யாழ்ப்பாண வர்த்தக மன்றம்
பொருளாதார நெருக்கடியினால் சீர்குலைந்துள்ள இலங்கையை மீட்கும் திறன் புலம்பெயர்ந்துள்ள தமிழ்மக்களுக்கு உண்டு என யாழ்ப்பாண வர்த்தக தொழில்துறை மன்றத்தின் துணைத் தலைவர் விக்னேஷ் தெரிவித்துள்ளார்.
இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது 1948ம் ஆண்டு பிரிட்டனிடம் இருந்து சுதந்திரம் பெற்றதில் இருந்து, முதல் முறையாக இலங்கை பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.
அன்னியச் செலாவணி பற்றாக்குறையால், இறக்குமதி செய்யப்படும் உணவு தானியங்கள் மற்றும் எரிபொருளுக்கு பணம் செலுத்த முடியாமல் இந்த நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசியப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
சில நாட்களுக்கு முன், பல மாதங்களாக பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்த இலங்கை அரசு, திவால் நிலையை அறிவித்தது. இலங்கை அரசு திவாலாகி விட்டதாக அந்நாட்டின் மத்திய வங்கி ஆளுநர் அறிவித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், பொருளாதார நெருக்கடியினால் சீர்குலைந்துள்ள இலங்கையை மீட்கும் திறன் புலம்பெயர்ந்துள்ள தமிழ்மக்களுக்கு உண்டு என யாழ்ப்பாண வர்த்தக தொழில்துறை மன்றத்தின் துணைத் தலைவர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். நாட்டின் தற்போதையை இக்கட்டான சூழ்நிலையில், பிரச்சினையை தீர்க்க புலம்பெயர்ந்துள்ள தமிழர்கள் தோள் கொடுத்தால், அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என யாழ்ப்பாணத்தில் செய்தியாளர் சந்திப்பின்போது கூறினார்.
புலம்பெயர்ந்துள்ள தமிழர்கள் மட்டுமல்லாது, நாட்டின் கல்வி அறிஞர்கள், தொழில் துறையினர், அரசாங்க ஊழியர்கள், வர்த்தகர்கள், அரசியல்வாதிகள் என அனைத்து ஒன்று சேர்ந்து இந்தப் பிராந்தியத்திம் பொருளாதார முன்னேற்றத்தாக உழைக்க வேண்டும். தற்போதைய இக்கட்டான நிலையில் அனைத்தையும் மறந்து ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளது எனவும், அவர் தெரிவித்தார்.
சமூகப் பொறுப்பினை உணர்ந்து அனைவரும் ஒன்றிணைந்து முயற்சியை முன்னெடுக்க வேண்டும் என்றும் யாழ்ப்பாண வர்த்தக தொழில்துறை மன்றத்தின் துணைத் தலைவர் விக்னேஷ் கூறினார்.
மேலும் படிக்க | இலங்கையில் உச்சம் தொட்ட பெட்ரோல் விலை; ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.450
யுத்த காலத்தில் புலம்பெயர் மக்களின் உதவிகள் தான் கை கொடுத்தது. எனவே வெளிநாட்டில் உள்ள புலம்பெயர் மக்களின் முதலீடுகள் அவசியம் தேவை என்றார். ஒரு சிறந்த ஒரு எதிர்காலம் இலங்கைக்கு காத்திருக்கின்றது என்பதால், அனைவரும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்றார்.
கலகம் பிறந்தால் தான் நியாயம் பிறக்கும். எனவே இலங்கைக்கு நிச்சயம் நியாயம் கிடைக்கப் போகின்றது. எதிர்வரும் காலத்தில் புலம்பெயர்ந்துள்ள மக்கள் தமது முதலீடுகளை வடபகுதியில் மேற்கொள்வதன் மூலம் வடபகுதியின் பொருளாதாரத்தை மேன்மேலும் மேம்படுத்த முடியும் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் படிக்க | ஆஸ்திரேலியாவுக்கு தப்பி செல்ல முயன்ற 21 இலங்கையர்கள் கைது!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR