இலங்கை தமிழர்களுக்கு தமிழக அரசு உதவத்தயார்: பிரதமரிடம் முதல்வர் மு.க. ஸ்டாலின்
தமிழர்கள் எங்கே இருந்தாலும், உக்ரைனில் இருந்தாலும், துபாயில் இருந்தாலும் அவர்களுக்கு உதவி செய்வோம்: தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்
டெல்லியில் ஏப்ரல் 2-ம் தேதி நடைபெற இருக்கும் அண்ணா-கலைஞர் அறிவாலய திறப்பு விழாவில் கலந்து கொள்ள 3 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் முதல் நாளான இன்று பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்தார்.
சுமார் 20 நிமிடம் நடைபெற்ற இந்த சந்திப்பில் டெல்லியில் திறக்கப்பட உள்ள திமுக அலுவலக திறப்பு விழாவுக்கு வருமாறு பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் அழைப்பு விடுத்தார். மேலும் தமிழகத்திற்கு தேவையான நிதி குறித்தும், திட்டங்கள் குறித்தும் பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் 14 கோரிக்கைகளை வைத்தார்.
மேலும் இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி நிலையின் காரணமாக அல்லலுறும் இலங்கை தமிழர்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உயிர் காக்கும் மருந்துகளை தமிழக அரசின் சார்பில் வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் தொடர்பாக பிரதமரிடம் பேசிய முதல்வர் ஸ்டாலின்.
இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டு இருக்கும் தமிழர்களுக்கு தமிழ்நாடு அரசு உதவி செய்ய தயாராக இருப்பதாக முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடியிடம் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | தமிழக அரசு தாராள மனதை காட்ட வேண்டும்: தமிழிசை வலியுறுத்தல்..!
குறிப்பாக அந்த கோரிக்கையில் இலங்கையில் பொருளாதார நெருக்கடி நிலவி வருவதன் காரணமாக இலங்கையில் இருந்து அகதிகள் தமிழ்நாட்டிற்கு வரும் நிலை ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் கூட 16 தமிழர்கள் இலங்கையில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்தனர். இலங்கையில் நிலவும் மோசமான பொருளாதார நிலை காரணமாக அவர்கள் தமிழ்நாடு வந்தனர். இலங்கையில் உணவும் வாங்க முடியாத பரிதாப நிலை அவர்களுக்கு நிலவுகிறது. இவர்கள் கடல்வழியாக மண்டபத்திற்கு வந்தனர். அவர்களுக்கு தற்காலிக இருப்பிடம் வழங்கப்பட்டுள்ளது.
‘இன்னும் பலர் இதேபோல் தமிழ்நாட்டிற்கு வரும் நாட்களில் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டு இருக்கும் தமிழர்களுக்கு தமிழ்நாடு அரசு உதவி செய்ய தயாராக உள்ளது. வடக்கு இலங்கையில் இருக்கும் தமிழர்கள், கொழும்பில் இருக்கும் தமிழர்கள், மலையக தமிழர்கள் ஆகியோருக்கு நாங்கள் உதவ தயாராக இருக்கிறோம். பொருளாதார நெருக்கடியால் இவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.
அவர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள், உணவுகள், மருந்துகளை அனுப்பி நாங்கள் தயார். அதற்கு மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும்’ என்று முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார்.
மற்றொரு நாட்டு மக்களுக்கு உதவ இந்திய வெளியுறவுத்துறை அனுமதி வேண்டும் என்பதால் முதல்வர் ஸ்டாலின் பிரதமரிடம் இந்த கோரிக்கையை வைத்தார். முன்னதாக துபாயில் பேசிய முதல்வர், தமிழர்கள் எங்கே இருந்தாலும், உக்ரைனில் இருந்தாலும், துபாயில் இருந்தாலும் அவர்களுக்கு உதவி செய்வோம் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR