முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு தகவல்களை பரப்பிய சேலம் மாவட்ட பாஜக நிர்வாகியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 5 நாள் அரசு முறைப்பயணமாக கடந்த 24-ம் தேதி துபாய் சென்று நேற்று சென்னை திரும்பினார். அவரது பயணம் குறித்து சேலம் மேற்கு மாவட்டம், எடப்பாடி ஒன்றிய பாஜக செயலாளர் அருள் பிரசாத் சமூக வலைதளங்களில் அவதூறான கருத்துகளை பகிர்ந்துள்ளார். இதனைத் தொடர்ந்து அருள் பிரசாத்தை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதே போன்று வேறொரு அவதூறு வழக்கில் நெல்லையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் படிக்க | அண்ணாமலைக்கு எதிராக கிரிமினல் வழக்கு : திமுக அதிரடி..!
அருள் பிரசாத் கைது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தமிழ்நாடு காவல்துறையின் புதிய சமூக ஊடக மையத்திற்கு இது முதல் சமர்ப்பிப்பாக இருக்கலாம் - வடிகட்டப்பட்ட முட்டாள் இது போன்ற முட்டாள்தனத்தை வெளிப்படையாக இடுகையிடுவதால் ஏற்படும் அபாயங்களைப் புரிந்து கொள்ளவில்லை என பதிவிட்டுள்ளார்.
TN காவல்துறையின் புதிய சமூக ஊடக மையத்திற்கு இது முதல் சமர்ப்பிப்பாக இருக்கலாம்
வடிகட்டப்பட்ட முட்டாள் இது போன்ற முட்டாள்தனத்தை வெளிப்படையாக இடுகையிடுவதால் ஏற்படும் அபாயங்களைப் புரிந்து கொள்ளவில்லை
சங்கிகள் வாட்ஸ்அப் விஷத்தைத் தாண்டிச் செல்லக் கூடாது pic.twitter.com/hIxwQl6L8v
— Dr P Thiaga Rajan (PTR) (@ptrmadurai) March 25, 2022
மேலும் படிக்க | மத அடிப்படையில் வெறுப்பு பேச்சு : பா.ஜ.க விஜோஜ் மீது வழக்கு
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G